ஜெ. முதல்வரானதை எதிர்த்து வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை
டெல்லி:
தமிழக முதல்வராக ஜெயலலிதா பொறுப்பேற்றுக் கொண்டதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கு சுப்ரீம்கோர்ட்டில் திங்கள்கிழமை விசாரணைக்கு வருகிறது.
டான்சி நிலப்பேர ஊழல் வழக்கில் சிறைத்தண்டனை பெற்றவர் ஜெயலலிதா. டான்சி நிலப்பேர ஊழல் தொடர்பானஜெயா பப்ளிகேஷன்ஸ் மற்றும சசி எண்டர்பிரைசஸ் வழக்குகளில் ஜெயலலிதாவுக்கு 5 ஆண்டுகள்சிறைத்தண்டனை அளித்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி, ஊழல் வழக்கில் 2 ஆண்டுகளுக்கு மேல் சிறைத்தண்டனை பெற்றவர்கள்தேர்தலில் போட்டியிட முடியாது. அதன்படி, ஆண்டிப்பட்டி, கிருஷ்ணகிரி, புவனகிரி மற்றும் புதுக்கோட்டைதொகுதிகளில் ஜெயலலிதா தாக்கல் செய்திருந்த மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.
ஆனால் நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெற்றது. இதையடுத்து ஜெயலலிதா தமிழகமுதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுநலன் கருதி வக்கீல்கள் மனோகர் லால் சர்மா மற்றும் கபூர் ஆகியோர் டெல்லிசுப்ரீம் கோர்ட்டில் வழக்குத் தொடர்ந்திருந்தனர்.
அந்த மனுவில், ஊழல் வழக்கில் தண்டனை பெற்ற ஜெயலலிதா முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்டதுஜனநாயக விரோத செயலாகும்.
ஜெயலலிதாவை முதல்வராகப் பொறுப்பேற்கும்படி, தமிழக கவர்னர் பாத்திமா பீவி கூறியது தவறானமுன்னுதாரணமாகும்.
அதனால் ஜெயலலிதா தமிழக முதல்வரானதை ரத்து செய்ய வேண்டும் என்று தங்களது மனுவில் கூறியுள்ளனர்.இந்த மனு மீதான விசாரணை திங்கள்கிழமை சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வருகிறது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications