தமிழ் தீவிரவாத அமைப்புகளை தடை செய்ய ஜெ. கோரிக்கை
டெல்லி:
தமிழ் தேசிய விடுதலைப் படை, தமிழ் தேச எழுச்சிப் படை, அல்-உம்மா ஆகிய இயக்கங்களுக்கு தடை விதிக்கவேண்டும் என மத்திய அரசிடம் ஜெயலலிதா கோரிக்கை விடுத்துள்ளார்.
டெல்லியில் பிரதமர் வாஜ்பாயையும் உள்துறை அமைச்சர் அத்வானியையும் அவர் செவ்வாய்க்கிழமை சந்தித்துப்பேசினார். இரண்டாவது முறை முதலமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்ட பிறகு பிரதமரை ஜெயலலிதா சந்திப்பதுஇதுவே முதல்முறையாகும்.
முன்னாள் முதல்வர் கருணாநிதி மீதான சர்க்காரியா கமிஷன் குற்றச்சாட்டுகளை விசாரிக்க அனுமதிக்க வேண்டும்என பிரதமரிடம் அவர் கோரிக்கை வைத்திருப்பார் எனத் தெரிகிறது. ஆனால், இது தொடர்பாக கருத்துத்தெரிவிக்க ஜெயலலிதா மறுத்துவிட்டார்.
அத்வானியிடம் பேசிய ஜெயலலிதா மதவாத, இனவாத அமைப்புகளைத் தடை செய்யுமாறு கேட்டுக் கொண்டார்.சந்தன வீரப்பனுடன் தொடர்புடைய தமிழ் தேசிய விடுதலைப் படை, தமிழ் தேசிய எழுச்சிப் படைஆகியவற்றையும் அல்-உம்மா அமைப்பையும் தடை செய்ய அவர் கோரிக்கை வைத்தார்.
தான் முதல்வராகப் பதவியேற்றதை எதிர்த்து சுப்ரீம்கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள், விசாரணைஆகியவை குறித்துக் நிருபர்கள் கேட்டபோது, நீதிமன்றத்தில் உள்ள ஒரு விவகாரம் குறித்து கருத்துக் கூறவிரும்பவில்லை என்றார் ஜெயலலிதா.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications