ஜெ. முதல்வராக நீடிக்க இடைக்கால தடை இல்லை: உச்ச நீதிமன்றம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

தமிழக முதல்வராக நீடிப்பதற்கு இடைக்காலத் தடை இல்லை என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

தமிழக முதல்வராக ஜெயலலிதா பொறுப்பேற்றுக் கொண்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் சில பொதுநலமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி, ஜெயலலிதா தமிழக முதல்வரானதுதவறு.

ஆளுநர் பாத்திமா பீவி, அவரை முதல்வராகப் பதவியேற்க அழைத்தது தவறு. அதனால் ஜெயலலிதாமுதல்வரானதை ரத்து செய்ய வேண்டும் என்று வழக்கறிஞர்கள் மனோகர் லால் சர்மா மற்றும் கபூர் ஆகியோர்சுப்ரீம் கோர்ட்டில் பொது நல மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர்.

தற்போது ஜெயலலிதா முதல்வராவதற்கு இடைக்காலத் தடை இல்லை என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்புவழங்கியுள்ளது.

முன்னதாக, டான்சி நிலப்பேர ஊழல் வழக்கில் இரண்டு ஆண்டுகளுக்கு மேல் தண்டனை பெற்ற காரணத்தால்ஜெயலலிதா தேர்தலில் போட்டியிடக் கூடாது என்று தாக்கல் செய்திருந்த மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+