2 வாரத்தில் வீரப்பன் வேட்டை தீவிரமாகும்... தேவாரம்
சென்னை:
சந்தனக் கடத்தல் வீரப்பனைத் தேடும் பணி இன்னும் 2 வாரத்தில் தீவிரமாக்கப்படும் என்று வீரப்பனைப் பிடிக்கும்பணியில் புதிதாக அமர்த்தப்பட்டுள்ள முன்னாள் தமிழக டி.ஜி.பி. வால்டேர் தேவாரம் கூறியுள்ளார்.
வீரப்பனைப் பிடிக்கும் பணியை முதல்வர் ஜெயலலிதா முடுக்கி விட்டுள்ளார். முதல் கட்டமாக வீரப்பனைப்பிடிக்கும் அதிரடிப்படையின் புதிய தலைவராக முன்னாள் டி.ஜி.பி. வால்டேர் தேவாரத்தை நியமித்துள்ளார்.அவருக்கு உதவியாக எல்லைப் பாதுகாப்புப் படையின் ஐஜியாக தற்போது உள்ள விஜயகுமார்அறிவிக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் வீரப்பன் வேட்டை தொடர்பான பணிகள் குறித்து உள்துறை செயலாளர் நரேஷ் குப்தாவுடன்புதன்கிழமை கோட்டையில் தேவாரம் ஆலோசனை நடத்தினார்.
அதன் பின்னர் செய்தியாளர்களுக்கு அவர் பேட்டியளிக்கையில், வீரப்பனைப் பிடிக்கும் பணி தற்போது டி.எஸ்.பி.தமிழ்ச்செல்வன் தலைமையில் தீவிரமாக நடந்து வருகிறது.
ஐ.ஜி. விஜயக்குமார் மத்திய அரசு பணியில் இருப்பதால் அவர் மாநில அரசுப் பணிக்கு வருவதில் சற்று காலதாமதம்ஆகலாம். எனவே அதுவரை தமிழ்ச்செல்வன் தலைமையில் தேடுதல் வேட்டை நடந்து வரும். இன்னும் 2 வாரத்தில்இப்பணி தீவிரமடையும்.
கர்நாடக அதிரடிப்படையுடன் சேர்ந்துதான் தேடுதல் வேட்டையில் ஈடுபடுவோம். தனித்து ஈடுபட மாட்டோம்.வீரப்பனைப் பிடிக்கும் வரை ஓய மாட்டோம். சரண் அடைவது அல்லது வீரப்பனை உயிருடன் பிடிப்பது, இதில் எதுமுதலில் நடக்கிறதோ அதுவரை தேடுதல் வேட்டை தொடரும். பொது மன்னிப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை.
தற்போது அதிரடிப்படையில் 250 பேர் வரை உள்ளனர். இவர்களில் திறமைக் குறைவானவர்கள்,விருப்பமில்லாதவர்கள் நீக்கப்பட்டு புதிதாக போலீஸார் மற்றும் அதிகாரிகள் நியமிக்கப்படுவர் என்றார் தேவாரம்.
-
அஷ்டமத்து சனி ஓவர்! இனிதான் விஜய் ஆட்டம் ஆரம்பம்! ஆட்சியை இழக்கவும் தயங்க மாட்டார்! ஷெல்வி கணிப்பு -
பங்குச்சந்தை வீழ்ச்சி அடையப்போகிறது! தங்கம், வெள்ளி விலை பல மடங்கு உயரும்.. பிரபல எக்ஸ்பர்ட் -
அழகிரி தந்த கிரீன் சிக்னல்.. தவெகவில் இணைகிறார் அழகிரியின் மகள் கயல்விழி.. விஜய் சொன்ன ஒரு வார்த்தை -
ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. இலவசமாக புதுப்பிக்க ஒரு வருடம் கால அவகாசம் நீட்டிப்பு! -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
5 ஆண்டுக்கு ஒருமுறை சம்பள உயர்வு; ₹69,000 அடிப்படைச் சம்பளம்... மத்திய அரசு போடும் ஸ்வீட் பிளான்! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம்












Click it and Unblock the Notifications