கவர்னர் விவகாரம்: கருணாநிதி மீது லத்தீப் குற்றச்சாட்டு
சென்னை:
தமிழக ஆளுனர் பாத்திமா பீவி, ஜெயலலிதாவுக்கு முதல்வராக பதவிப் பிரமாணம் செய்து வைத்ததை கருணாநிதிஅரசியலாக்குகிறார் என இந்திய தேசிய லீக்கின் (ஐ.என்.எல்.)பொதுச் செயலாளரும் அக்கட்சியின் தமிழ்நாடுதலைவருமான எம்.ஏ. லத்தீப் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்திய லீக்கின் மாநில பொதுககுழு கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களுக்கு லத்தீப் பேட்டியளித்தார். பேட்டியின்போது அவர் கூறுகையில், கருணாநிதியும், தமிழக பா.ஜ.கவும் பாத்திமா பீவியை மத்திய அரசு திரும்ப பெறவேண்டும் என கூறுவதற்கு அரசியல் காழ்ப்புணர்ச்சியே காரணம்.
தி.மு.கவும் பா.ஜ.வும் தமிழக ஆளுனரை திரும்பப் பெற வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளதை எதிர்த்து இந்தியலீக் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. பாத்திமாபீவி அரசியல் சட்டப்படி தனக்கு உள்ள அதிகாரத்தின்படியேசெயல்பட்டுள்ளார்.
ஜெயலலிதாவிற்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தது சரிதான். அதை சட்டரீதியாக எதிர்க்க முடியாது
தி.மு.கவால் அமைக்கப்பட்ட உருது அகாடமியும், வாக்ஃப் போர்டும் ஒழுங்கற்ற முறையில் செயல்படுவதால்நஷ்டம் ஏற்பட்டு வருகிறது. எனவே அவை சீரமைக்கப்பட வேண்டும். அதேபோல் தமிழக ஹஜ் கமிட்டியும் மாநிலசிறுபான்மை கமிஷனும் சீரமைக்கப்பட வேண்டும்.
கரும்பு விவாசாயிகள் நீண்ட காலமாக டன் ஒன்று ரூ 1,000 கொடுக்கப்பட வேண்டும் என கேட்டு வருகிறார்கள்அதை அரசு ஏற்க வேண்டும் எனவும் தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம் என்றார்.
யு.என்.ஐ.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications