ஜெ.மீதான நிலக்கரி ஊழல் வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

முதல்வர் ஜெயலலிதா மீதான நிலக்கரி ஊழல் வழக்கில் அரசு தரப்பு வக்கீல் ஆவணங்களை படிக்க கால அவகாசம்கேட்டதால், வழக்கு விசாரணை அடுத்த வாரத்திற்கு தள்ளி வைக்கப்பட்டது.

1991ம் ஆண்டு ஜெயலலிதா முத்லவராக இருந்த போது ஊழல் செய்தததாக அவர் மீதும் அவரது அமைச்சரவைசகாகக்கள் மீதும் தி.மு.க அரசு பல வழக்குகளை தொடர்ந்தது.

இந்த வழக்குகளை விசாரிக்க தனி நீதிமன்றமும் அமைக்கப்பட்டது. பல வழக்குளில் தீர்ப்பும் வழங்கப்பட்டது.இந்நிலையில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்றது. மீண்டும் ஜெயலலிதா முதல்வரானார்.

இதையடுத்து பல அரசு வக்கீல்களும் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். ஜெயலலிதா உள்ளிட்ட 10 பேர்மீதான ரூ 6.5 கோடி நிலக்கரி ஊழல் வழக்கில் அரசு தரப்பில் ஆஜராகி வாதாடி வந்த வக்கீலும் ராஜினாமா செய்துவிட்டார். இதையடுத்து அந்த வழக்கில் அரசு தரப்பில் வாதாட சந்திரசேகரன் புதிய வழக்கறிஞராகநியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த வழக்கு இரண்டாவது தனி நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது அரசு தரப்பில் ஆஜராவதற்கானமனுவை சந்திரசேகரனின் ஜுனியர் வழக்கறிஞர் தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு தொடர்பான ஆவணங்களை படிப்பதற்கு கால அவகாசம் வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.இதை ஏற்றுக் கொண்ட இரண்டாவது தனி நீதிமன்ற நீதிபதி கார்வேஸ், நிலக்கரி ஊழல் வழக்கை இந்த மாதம் 12ம்தேதிக்கு ஒத்தி வைத்தார்.

முன்னாள் தலைமைச் செயலாளர் ஹரிபாஸ்கர் மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்குஉள்ளது. அந்த வழக்கிலும் சந்திரசேகர்தான் ஆஜராகிறார்.

அந்த வழக்கு ஆவணங்களை படிக்க கால அவகாசம் கோரப்பட்டதால், அந்த வழக்கை இந்த மாதம் 19ம் தேதிக்குநீதிபதி தள்ளி வைத்தார்.

நிலக்கரி ஊழல் வழக்கில் அரசு தரப்பில் ஆஜராக புதிய வழக்கறிஞர் நியமிக்கப்பட்டுள்ளதையடுத்து மற்றவழக்குகளிலும் அரசு தரப்பில் ஆஜராக புதிய வழக்கறிஞர்கள் நியமிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் முதல் தனிநீதிமன்றத்தில் நிலுவையிலிருக்கும் வழக்கு விசாரணை சூடு பிடிக்கும் என்றும்எதிர்பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+