ஆந்திராவிலிருந்து தமிழக மீனவர்கள் மீட்பு
சென்னை:
ஆந்திர கடற்கொள்ளையரால் கடத்தப்பட்ட தமிழக மீனவர்கள் 60 பேர் பணயத் தொகை கொடுக்கப்பட்டுமீட்கப்பட்டனர்.
கடந்த மே மாதம் 30, 31 ம் தேதிகளிலும், ஜூன் மாதம் 1 ம் தேதியும் காசிமேடு பகுதியிலிருந்து 10விசைப்படகுகளில் 60 மீனவர்கள் சென்றனர்.
இவர்களது விசைப்படகு ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்திலுள்ள கடல் அருகே சென்று கொண்டிருந்த போதுஆந்திர கடற்கொள்ளைக்காரர்கள் அவர்களைத் தாக்கினர்.
நடுக்கடலில் இவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது 6 படகுகளில் 30 க்கும் மேற்பட்ட கடற்கொள்ளையர்கள்தாக்குதல் நடத்தினர்.
தமிழக மீனவர்களிடம் இருந்த அரிசி, பருப்பு போன்ற பொருட்கள், ரொக்கப்பணம் ஆகியவற்றை ஆந்திரகடற்கொள்ளையர்கள் பறித்துக் கொண்டு சென்றனர்.
பின்னர் மீனவர்கள் அனைவரும் ஆந்திர மாநிலம் ஊட்டுக்கூர் பெத்தபாளையம் கிராமத்துக்குக் கடத்திச்செல்லப்பட்டனர். அங்கு அவர்கள் 3 நாட்கள் சிறைவைக்கப்பட்டனர்.
இந்தத் தகவல்கள் சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்ட மீனவர்கள் சங்கத்துக்குத் தெரிய வந்தது.
பின்னர் மீனவர் சங்க உறுப்பினர்கள் ஆந்திர மாநிலத்துக்குச் சென்று கொள்ளையர்களுடன் பேச்சுவார்த்தைநடத்தினர். அவர்கள் ரூ 2 லட்சம் பணயத்தொகை கொடுத்தால்தான் மீனவர்களை விடுதலை செய்வோம் என்றனர்.
இதையடுத்து ரூ 50, 000 பணயத்தொகை கொடுத்து மீனவர்கள் மீட்கப்பட்டனர்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications