அரசு காரில் சுற்றித் திரிந்த பொன்முடியின் மகன்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

திமுக ஆட்சியில் போக்குவரத்து அமைச்சராக இருந்த பொன்முடியின் மகன் தனது தந்தைக்கு அளிக்கப்பட்ட அரசுகாரை தனது சொந்த உபயோகத்துக்காக பயன்படுத்தி வந்த விவரம் இப்போது தெரிய வந்துள்ளது.

அவரது பாதுகாப்புக்காக என்று 2 அரசு கார்களும் பயன்படுத்தப்பட்டு வந்தன.

கருணாநிதி அமைச்சரவையில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த பொன்முடிக்கு டாடா சபாரி காரைசென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம் அளித்திருந்தது.

ஆனால், இந்த கார் முழுக்க முழுக்க அவருடைய மகனின் சொந்த உபயோகத்துக்காகப் பயன்படுத்தப்பட்டுள்ளது.இதற்கான எரிபொருள் செலவை ஏற்றதோடு, அதற்காக ஓட்டுநர் ஒருவரையும் ஒதுக்கித் தந்திருந்ததுபோக்குவரத்துக் கழகம். இதற்காக ஒரு மாதத்துக்கு ரூ.25,000 வரை செலவிடப்பட்டுள்ளது.

அமைச்சர் மகன் எந்த பந்தாவுடன் பாதுகாப்புக்கு காவல்துறையினர் 2 கார்களில் செல்ல இந்தச் சொகுசு காரில்ஒய்யாரமாகப் பவனி வந்துள்ளார் அமைச்சரின் மகன். அவர் கல்லூரிக்கு இந்த காரில் செல்லும்போதும் 2கார்களில் போலீசார் தொடர்ந்து சென்று வந்துள்ளனர்.

இந்தத் தகவல்களை போக்குவரத்துத்துறை அதிகாரிகள் இப்போது வெளியிட்டுள்ளனர்.

பென்முடி மறுப்பு:

ஆனால் இந்த புகார்களையெல்லாம் பொன்முடி மறுத்துள்ளார். சொந்த வாகனத்தில்தான் தன்னுடைய மகன்கல்லூரிக்குச் சென்ற வந்ததாகவும், அந்த வாகனம் பழுதடைந்த ஓரிரு நாட்கள் மட்டுமே இந்த காரைப்பயன்படுத்தி இருக்கலாம் என்றார் அவர்.

தற்போது இந்த காரைப் பயன்படுத்த யாரும் தயாராக இல்லாததால், அது அயன்புரம் போக்குவரத்துபணிமனையில் அநாதையாக நின்று கொண்டிருக்கிறது.

திமுக ஆட்சியில் இருந்தவரை இந்த விவரம் வெளியே வரவில்லை. இப்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு தான்இந்த விவரத்தை போக்குவரத்து அதிகாரிகள் வெளியே கூறுகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+