இலங்கையை சேர்ந்த போலி டாக்டர்கள் கைது

Subscribe to Oneindia Tamil

ஈரோடு:

ஈரோட்டில் எய்ட்ஸ் நோய்க்கு மருந்து தருவதாகவும் வைத்தியம் பார்ப்பதாகவும் கூறி கிளினிக் நடத்தியஇலங்கையைச் சேர்ந்த போலி டாக்டர்கள் இருவரைப் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்த போலியானமருந்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

ஈரோட்டில், பூங்காநகர் பகுதியில் ஏ.வி கிளினிக் என்ற ஒரு நிறுவனத்தை ஆரம்பித்து இருவர் நடத்தினர். இவர்கள்கடந்த 1990 ம்ஆண்டு இலங்கையிலிருந்து இந்தியாவிற்கு வந்தனர். ஆறுமுகராஜன் (43), சச்சிதானந்தான் (32),ஆகிய இவர்கள் முதலில் ஈரோட்டிற்கு வந்தபோது செருப்புக் கடை வைப்பதாகக் கூறி இடம் கேட்டனர்.இவர்களில் ஆறுமுகராஜன் ஆயுர்வேத டாக்டர் எனவும், அவர் கிளினிக் வைப்பார் எனவும் கூறினர். பின்னர் இந்தஇடத்தில் இருவரும் ஏ.வி கிளினிக் என்ற மருத்துவமனையைத் தொடங்கினர்.

எய்ட்ஸ் நோய்க்கு மருத்துவம் பார்ப்பதாகக் கூறி பலரிடம் பல ஆயிரக்கணக்கான ரூாபாய்களைப் பெற்றுக்கொண்டனர். இவர்கள் கொடுத்த மருந்தினால் எவ்விதப் பயனும் இல்லை என அறிந்த பலர் போலீசில் புகார்செய்தனர். எனவே இருவரும் கடந்த டிசம்பர் மாதத்தில் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட பிறகு இருவரும் உயர்நீதிமன்றத்தில் கைது செய்தது செல்லாது எனக் கூறி தடை வாங்கினார்.பின்னர் மீண்டும் கிளினிக் இல்லாமல் வைத்தியம் பார்க்கத்தொடங்கினர். இந்த நிலையில், கருங்கல்பாளையத்தைச்சேர்ந்த ஆல்பர்ட், ஈரோட்டைச் சேரந்த தில்லை ஆகியோர் சிகிச்சை பெற்றனர். அப்போது அவர்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இவர்கள் உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

இதையடுத்து ஆறுமுகராஜன் மற்றும் சச்சிதானந்தன் ஆகிய இருவரும் மீண்டும் கைது செய்யப்பட்டனர். இவர்கள்மீது தவறான சிகிச்சை அளித்தததற்கும், விசாக் காலத்திற்கு மேல் தங்கியிருந்தத குற்றத்திற்காகவும் வழக்குப் பதிவுசெய்யப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+