குருவாயூருக்கு ஜெ. யானை பரிசளிக்கும் நிகழ்ச்சி ஒத்திவைப்பு
Subscribe to Oneindia Tamil
குருவாயூர்:
முதல்வர் ஜெயலலிதா குருவாயூர் கோயிலுக்கு யானை பரிசளிக்கும் நிகழ்ச்சி வரும் 23ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
முதல்வரானால் குருவாயூர் கோயிலுக்கு யானை குட்டி தருவதாக ஜெயலலிதா வேண்டிக் கொண்டார். வேண்டியவரம் கிடைத்ததால் குருவாயூரப்பனுக்கு யானை ஒன்றை முதல்வர் ஜெயலலிதா அன்பளிப்பாக அளிக்கவுள்ளார்.
இதற்கான யானை தேர்வு செய்யப்பட்டு மருத்துவ ரீதியாக சான்றிதழ் அளிக்கப்பட்டு விட்டது. இந்த யானையைகோயிலில் செலுத்த குருவாயூர் தேவஸ்தானம் அனுமதி அளித்து விட்டது.
இதையடுத்து குருவாயூர் கோயிலில் யானையை ஒப்படைக்கும் நிகழ்ச்சி ஜூன் 10ம் தேதி நடப்பதாக இருந்தது.ஆனால், இந்நிகழ்ச்சி வரும் 23ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டு விட்டது. இதையடுத்து 23ம் தேதி, முதல்வர்ஜெயலலிதா குருவாயூர் செல்கிறார். இந்த தகவலை குருவாயூர் தேவஸ்தான அதிகாரி சதீஷ் தெரிவித்துள்ளார்












Click it and Unblock the Notifications