ரயில் கொள்ளையர்களைப் பிடிக்கப் புதிய திட்டம்
சென்னை:
ரயில் கொள்ளையர்களைப் பிடிக்கப் புதிய திட்டம் தயாரிக்கப் பட்டுள்ளதாக போலீஸ் ஐ.ஜி. திலகவதிகூறியுள்ளார்.
காட்பாடி, ஜோலார்பேட்டை பகுதிகளில் கடந்த 3 மாதங்களில் அடுத்தடுத்து 6 ரெயில் கொள்ளைச் சம்பவங்கள்தமிழகத்தையே உலுக்கியது.
இதுகுறித்து, ரெயில்வே போலீஸ் ஐ.ஜி. திலகவதி மற்றும் டி.ஐ.ஜி. ஆகியோர் தலைமையில் ஆலோசனைநடத்தப்பட்டது. இதில் கொள்ளையர்களைப் பிடிப்பதற்காக புதிய திட்டம் வகுக்கப்பட்டது.
அதன்படி, ரெயில் ரோந்துப் பணி பட்டியல் ஒன்று புதிதாகத் தயாரிக்கப்பட்டுள்ளது. சென்னை, திருச்சி ரெயில்வேபோலீஸார் மற்றும் தமிழ்நாடு சிறப்பு போலீஸார் ஆகியோர் கொண்ட குழு களத்தில் இறங்கியுள்ளது.
இவர்கள் ரெயில் நிலையங்களில் மட்டுமில்லாமல், ரயில்வே பாதைகளிலும் முக்கியப் பகுதிகளில் பாதுகாப்புப்பணியில் ஈடுபடுவார்கள். கொள்ளையில் ஈடுபடுவோரைக் கண்டதும் சுடுவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இது தவிர, பெண் போலீஸாருக்கு புதிய மெகாபோன்கள் வழங்கப்பட்டுள்ளன. அவர்கள் பிளாட்பாரங்களில்நின்றுகொண்டு, பயணிகளுக்கான முன் எச்சரிக்கை தகவல்களை அவ்வப்போது அறிவித்துக் கொண்டேஇருப்பார்கள். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் தற்போது பெண் போலீஸார் இந்தப் பணியில்ஈடுபட்டுள்ளனர்.
மேலும், 80 போலீஸார் அடங்கிய குழு ஒன்று வாரத்திற்கு 2 நாள் ரெயில்வே பிளாட்பாரத்தில் கொடி அணிவகுப்புநடத்துகின்றனர். பொதுமக்கள் விழிப்புணர்வு பெறுவதற்காகவும், குற்றவாளிகளுக்கு அச்சுறுத்தலைஏற்படுத்துவதற்காகவும் இந்த அணிவகுப்புகள் நடைபெற்று வருகின்றன.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications