ஜிம்பாப்வே கிரிக்கெட்: முதல் டெஸ்ட்டில் இந்தியா வெற்றி
பொலாவாயோ (ஜிம்பாப்வே):
ஜிம்பாப்வேக்கு எதிரான முதலாவது கிரிக்கெட் டெஸ்டில் இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.
இன்னும் 1 நாள் ஆட்டம் மிச்சமிருக்கையிலேயே இந்தியாவுக்கு இந்த சிறப்பான வெற்றி கிடைத்துவிட்டது.இந்தியாவின் துவக்க ஆட்டக்காரரான தாஸ் சிறப்பாக விளையாடி 82 ரன்கள் சேர்த்தார்.
7 விக்கெட் இழப்புக்கு 303 ரன்களுடன் 4வது நாள் ஆட்டத்தைத் தொடங்கிய ஜிம்பாப்வே அணியினர்,விரைவிலேயே அடுத்தடுத்து மீதமிருந்த 3 விக்கெட்டுகளையும் பறிகொடுத்தனர்.
318 ரன்களுக்கு 2வது இன்னிங்ஸை ஜிம்பாப்வே இழந்துவிட்டது.
184 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன், இந்தியா தன்னுடைய 2வது இன்னிங்ஸை ஆரம்பித்தது. முதல்இன்னிங்ஸ் போல் அல்லாமல், இப்போது தாஸும் ரமேஸும் நிலைத்து நின்று ஆடத் தொடங்கினர்.
ஆனாலும் மட்டை போட்டுக் கொண்டிருந்த ரமேஸ், 61 பந்துகளில் 17 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார்.தொடர்ந்து இறங்கிய வி.வி.எஸ். லட்சுமண் தன்னுடைய அதிரடி ஆட்டத்தை ஆரம்பித்தார்.
மளமளவென்று ரன்களைக் குவித்த லட்சுமண், கிராண்ட் பிளவர் வீசிய பந்தில் அவரிடமே கேட்ச் கொடுத்து,பெவிலியனுக்குத் திரும்பினார். லட்சுமண் 35 பந்துகளில் 38 ரன்களைக் குவித்திருந்தார். இதில், 5 பவுண்டரிகளும்,ஒரு சிக்ஸரும் அடங்கும். அப்போது இந்தியாவின் எண்ணிக்கை 132 ரன்கள்.
அதற்கப்புறம், இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமான தண்டுல்கருடன் ஜோடி சேர்ந்தார் தாஸ். இருவரும் நின்றுநிதானமாக ஆடி, இந்தியாவை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர்.
54வது ஓவரின் 4வது பந்தில் தண்டுல்கர் எடுத்த 1 ரன் மூலம் ஜிம்பாப்வேக்கு எதிரான முதலாவது கிரிக்கெட்டெஸ்டில் இந்தியா அபார வெற்றியைப் பெற்றது.
தண்டுல்கர் 49 பந்துகளில், 4 பவுண்டரிகளுடன் 36 ரன்கள் எடுத்தார். துவக்க ஆட்டக்காரராக இறங்கிய தாஸ் 183பந்துகளில் 82 ரன்கள் எடுத்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இவருடைய எண்ணிக்கையில் 10பவுண்டரிகளும் அடங்கும்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications