கனடாவில் இந்தியப் பெண்ணின் கருவிலேயே குழந்தை பலி
டொரான்டோ:
கனடாவில் உள்ள ஒரு மருத்துவமனையில் பெட் பற்றாக்குறை காரணமாக ஏற்பட்ட தாமதத்தால், ஒரு இந்தியப்பெண்ணுக்கு கருவிலேயே குழந்தை இறந்து விட்டது.
டொராண்டோவில் வசித்து வரும் சுர்ஜித் கொராயா என்ற 24 வயது இந்தியப் பெண், தான் கர்ப்பமாகி சரியாக 41வாரங்களில், அவருடைய குடும்ப டாக்டரிடம் சென்றார். சிசேரியன் செய்துதான் குழந்தையை எடுக்க வேண்டும்என்ற சூழ்நிலையில், ஜூன் 4ஆம் தேதி சிசேரியன் ஆபரேசனை நிர்ணயித்து விட்டார் அந்த டாக்டர்.
ஜூன் 4ஆம் தேதி சிசேரியன் நடைபெறுவதாக இருந்த சர்ரே மெமோரியல் மருத்துவமனைக்குச் சென்றார் சுர்ஜித்.ஆனால், அப்போதைக்கு மருத்துவமனையில் எல்லாப் பெட்களும் நிரம்பி விட்டதால், சிசேரியனை ஒத்திவைத்துஅவரை திரும்பவும் வீட்டுக்கு அனுப்பி வைத்து விட்டனர்.
இந்நிலையில், தன் கர்ப்பத்தில் வளர்ந்து கொண்டிருந்த குழந்தையிடம் இருந்து எந்த ஒரு அசைவும் இல்லாமல்போனதை உணர்ந்துள்ளார் சுர்ஜித். இதைத் தொடர்ந்து அவர் அதே மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
சிசேரியனும் நல்லபடியாக நடந்தது. ஆனால், குழந்தை இறந்தே பிறந்தது.
பெட் இல்லாததை ஒரு காரணமாகச் சொல்லி ஒரு சிசுவைக் கொன்றுள்ளனர் என்று மருத்துவமனை மேல் புகார்சொல்லப்படுகிறது. மருத்துவமனையிலும், அன்று உண்மையிலேயே பெட் எதுவும் காலி இல்லை என்று ஒருடாக்டரும், இதுபோன்ற பிரசவ கேசுகளுக்காகவே சிறப்பு பெட்கள் இங்கு உள்ளன என்று வேறு ஒரு டாக்டரும்கூறுகின்றனர்.
எல்லாம் முடிந்த பிறகு யாரைக் குற்றம் சொல்லி என்ன செய்வது?
இதற்குப் பதில் சொல்லியே ஆக வேண்டும் என்று சுர்ஜித்தின் குடும்பம் அந்த மருத்துவமனையைக் குடைந்துகொண்டிருக்கிறது. இருந்தாலும், இதுபோன்ற சம்பவங்கள் வேறு எந்தக் குடும்பத்துக்கும் நடந்துவிடக் கூடாதுஎன்றும் அவர்கள் மனிதாபிமானத்துடன் கூறி வருகின்றனர்.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications