கச்சத்தீவை மீட்க வேண்டும்: தி.க. கோரிக்கை
மதுரை:
கச்சத்தீவை இலங்கையிடமிருந்து மீட்க வேண்டும் என்றும், மீனவர் பிரச்சனைக்கு நிரந்தரமான முடிவு காணவேண்டும் என்றும் திராவிடர் கழக பொதுச் செயலாளர் வீரமணி கேட்டுக் கொண்டுள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களுக்கு அவர் பேட்டியளித்தபோது:
தமிழகத்தின் கிழக்குப் பகுதியில் வாழும் மீனவர்கள் கச்சத்தீவு பகுதிக்குள் மீன் பிடிக்கச் செல்வதால் அவர்கள்தொடர்ந்து இலங்கை கடற்படையினரால் தாக்கப்பட்டு வருகின்றனர்.
இந்திராகாந்தி பிரதமராக இருந்த போது இலங்கையிடம் கச்சத்தீவை ஒப்படைக்கப்பட்டது. அது மிகப் பெரியதவறு. தமிழக மீனவர்கள் மீன் பிடிக்கச் செல்லும் போது தவறுதலாக சர்வதேச நீர் எல்லையைக் கடந்துவிடுகின்றனர். அதனால் அவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து விடுகின்றனர்.
கைது செய்யப்படும் மீனவர்கள் பற்றி இந்திய அரசு கவலைப்படுவதில்லை என்பது வருந்தத்தக்கது. கச்சத்தீவைஇலங்கையிடமிருந்து மீட்டு மீனவர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்.
இலங்கை அரசுக்கும் விடுதலை புலிகளுக்கும் இடையே அமைதிப் பேச்சுவார்த்தைக்கான சூழ்நிலையைஏற்படுத்தும் முயற்சியில் நார்வே அரசு ஈடுபட்டிருப்பது வரவேற்கத்தக்கது. ஆனால் இதுவரை இந்த முயற்சியில்ஈடுபட்டு வந்த எரிக் சோல்ஹேமை நீக்கியது வருந்ததக்கது.
காஷ்மீர் பிரச்சனை குறித்து பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்தவிருப்பதைப் போல், இலங்கை தமிழர்பிரச்சனையைத் தீர்க்க இலங்கை அரசுடன் இந்தியா பேச்சுவார்த்தை நடத்த முயல வேண்டும் என்றார்.
யு.என்.ஐ.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications