ஜெயா டிவிக்கு சிறப்பு சலுகையா?
சென்னை:
தமிழக முதல்வர் ஜெயலலிதாவும், தமிழக ஆளுநர் பாத்திமா பீவியும் ராஜ்பவனில் சந்தித்து பேசியதைப் படம்பிடிக்க ஜெயா டிவிக்கு மட்டும் எந்தவிதமான சலுகையும் அளிக்கப்படவில்லை என அந்த டிவி நிறுவனம்கூறியுள்ளது.
கடந்த சனிக்கிழமை ஜெயலலிதா தமிழக ஆளுநரை சந்தித்து பேசினார். அப்போது தமிழக அமைச்சர்களாக இருந்தஅய்யாறு வாண்டையார், நத்தம் விஸ்வநாதன் மற்றும் பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோரை பதவி நீக்கம்செய்துவிட்டு வேறு 3 புதிய அமைச்சர்களை நியமிப்பது குறித்து ஆளுநரிடம் தெரிவித்தார்.
இச்சந்திப்பைப் படம் பிடிக்க ஜெயா டிவியைத் தவிர வேறு எந்தப் பத்திரிக்கையாளர்களோ தனியார்டிவிக்காரர்களோ அனுமதிக்கப்படவில்லை என்று குற்றம் சாட்டப்பட்டது. இதனால் பத்திரிகையாளர்களும் மற்றடிவி நிருபர்களும் ராஜ்பவன் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர், பிரஸ் கிளப்பில் ஜெயா டிவிக்கு சலுகை அளிக்கப்பட்டதை எதிர்த்து கண்டனத் தீர்மானமும்நிறைவேற்றப்பட்டது.
இது குறித்து ஜெயா டிவி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சனிக்கிழமை ராஜ்பவனில்முதல்வர்-ஆளுநருக்கிடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையை படம் பிடிக்க ஜெயா டிவி அனுமதிக்கப்படவில்லை.இதற்காக ஜெயா டிவிக்கு எந்த சலுகையும் அளிக்கப்படவில்லை.
முதல்வர்-ஆளுநர் சந்திப்பு பற்றிய காட்சிகள் எதுவும் ஜெயா டிவியில் காட்டப்படவில்லை. சிறப்பு செய்தியும்வெளியிடப்படவில்லை. இது போன்ற செய்திகள் விஷமத்தனமானவை. தவறான எண்ணத்துடன் பரப்பப்பட்டவைஎன கூறியுள்ளது.
யு.என்.ஐ.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications