ஆளுனரைக் குறை சொல்லக்கூடாது: லத்தீப்
கரூர்:
ஆளுநர் தீர்ப்பு குறித்து குறை சொல்ல அரசியல் கட்சிகளுக்கு அதிகாரம் இல்லை என தேசிய முஸ்லீம் கட்சியின்பொதுச் செயலாளரும் எம்.எல்.ஏ.வுமான அப்துல் லத்தீப் கூறியுள்ளார்.
அவர் கரூரில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் மேலும் கூறியதாவது:
அமைச்சரை நீக்குவது, அமைச்சரை மாற்றுவது என்பதெல்லாம் முதல்வரின் அதிகாரத்திற்குட்பட்டது. அவரதுவிருப்பத்தின் பேரில் ஏற்படக்கூடியதும் கூட.
கூட்டணியின் நோக்கமே தகாதவர்களை நீக்கி விட்டு, தகுந்தவர்களைச் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்பதுதான்.அது நிறைவேறியுள்ளது. காலச் சூழ்நிலைக்கு ஏற்ப கூட்டணியை, நடைமுறையை மாற்றிக் கொள்வதுஇயல்பாகிவிட்டது.
தேர்தல் முடிந்தவுடன் இப்போது காங்கிரசுடன் கூட்டணி இல்லை என ஜெயலலிதா கூறியுள்ளார். எனவேகாங்கிரஸ் தலைவர் இளங்கோவன் ஒருங்கிணைந்த எதிர்க்கட்சியாக செயல்படுவோம் என தெரிவித்துள்ளார்.இவ்வாறு அவர் கூறுவதால், எதிரியாக மாறி விட்டதாக அர்த்தம் கொள்ள முடியாது.
தமிழக ஆளுநரைத் திரும்பப் பெற வேண்டும் என திமுகவும், பாஜகவும் கூறியுள்ளன. ஆளுநரைக் கண்காணிக்கும்உரிமை அரசியல் கட்சிகளுக்கு கிடையாது. சில சிக்கலான சூழ்நிலைகளில் குடியரசுத்தலைவர் எவ்வாறுமுடிவெடுக்க முடியுமோ, அப்படியே ஆளுநரும் முடிவெடுக்கலாம். எனவே, இவர்களது தன்னிச்சையானஅதிகாரத்தை யாரும் மறுக்க முடியாது.
ஆளுநரை விமர்சிப்பதும், அவரை திரும்ப அழைக்க வேண்டும் எனக் கூறுவதும், அவரது அதிகாரத்தில்தலையிடுவதும் ஜனநாயக மரபுகளைக் கடைபிடித்து வரும் அரசியல் கட்சிகளுக்கு ஏற்புடையதல்ல.
நேபாளத்தில் மன்னர் குடும்பம் படுகொலை செய்யப்பட்டதில் பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. உளவுப் பிரிவிற்குத்தொடர்புள்ளது என பால் தாக்கரே கூறியுள்ளார். அவ்வாறு தொடர்புடையது என்பது இவருக்கு எப்படி தெரியும்?அப்படி தொடர்பு இருப்பது இவருக்குத் தெரியுமானால், இது குறித்து பால் தாக்கரேயிடம் விசாரணைமேற்கொள்ள வேண்டும்.
இந்தியா முழுவதிலும் ஐ.எஸ்.ஐ., ஊடுறுவல் உள்ளது எனத் தெரிவித்துள்ளார். அப்படியானால், அவர்கள் என்னசெய்து கொண்டு இருக்கின்றனர்? ஆயிரம் வழிகளில் நடவடிக்கை எடுத்து தடுத்து நிறுத்தலாமே. ஆயிரத்து ஒருமுறையில் அவர்கள் உள்ளே நுழைந்தால், அவர்களைப் பிடிக்க முடியவில்லை என்றால், உங்களுக்குத் திறமைஇல்லை என்று தானே அர்த்தம் என்றார் லத்தீப்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications