பெண் போலீசிடம் பிக்பாக்கெட் அடித்த பெண்
Subscribe to Oneindia Tamil
சேலம்:
பெண் போலீசாரிடமே பிக்பாக்கெட் அடித்த பெண்ணைப் போலீசார் தேடி வருகின்றனர்.
ஐதராபாத்தில் உள்ள மத்திய ரிசர்வ் படையில் பெண் போலீசாகப்பணியாற்றி வருபவர் அம்பிகா. இவர்ஐதராபாத்திலிருந்து சில பொருட்களை எடுத்து வந்தார்.
அவரது சொந்த ஊரான மகாதானபுரத்திற்குப் பஸ்சில் சென்று கொண்டிருந்தார். அப்போது அருகில் இருந்த ஒருபெண், இவரது பேக்கில் வைத்திருந்த தங்க காசு, பணம் ஆகியவற்றை பிக் பாக்கெட் அடித்து தப்பி விட்டார்.
இந்த சம்பவம் குறித்து கரூர் லாலா பேட்டைப் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்துவிசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications