தேக்குமரக்கடத்தல்.... வாண்டையார் நண்பர் கைது
திருநெல்வேலி:
சமீபத்தில் பதவிநீக்கம் செய்யப்பட்ட தமிழக அமைச்சர் அய்யாறு வாண்டையரின் நண்பர் முருகையன்,தேக்குமரங்கள் கடத்தப்பட்டது தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ளார்.ஆனால் இந்த விவகாரத்தில்வாண்டையாருக்கு எந்த விதமான தொடர்பும் இல்லை என முருகையன் கூறியுள்ளார்.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள களக்காடு - முண்டந்துறை புலிகள் காப்பம் உள்ளது. இது வனத்துறையின்கட்டுப்பாட்டில் உள்ளது. இங்கு ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் தேக்குமரம் பயிரிடப்பட்டுள்ளது.
ஒரு கும்பல் நீண்டகாலமாக இங்கிருந்து தேக்குமரங்களைக் கடத்திச் சென்றது. இந்த கடத்தல் விஷயத்தில் சமீபத்தில்பதவி நீக்கம் செய்யப்பட்ட தமிழக அமைச்சர் அய்யாறு வாண்டையாரின் நண்பர் முருகையன் ஈடுபட்டதாககூறப்பட்டு வந்தது.
இந்த விஷயம் தொடர்பாக, செய்தியாளர்களைச் சந்தித்த ராதாபுரம் சுயேச்சை எம்.எல்.ஏ. அப்பாவு, இந்த கடத்தல்விஷயத்தில் தனுஷ்கோடி ஆதித்தனுக்கும், தற்போதைய அமைச்சர் ஒருவருக்கும் தொடர்பு இருப்பதாக குற்றம்சாட்டினார். ஆனாலும் அவர் அமைச்சரின் பெயரை வெளியிடவில்லை.
இந்நிலையில் அய்யாறு வாண்டையாரை தமிழக முதல்வர் ஜெயலலிதா சனிக்கிழமை பதவி நீக்கம் செய்தார்.அய்யாறு வாண்டையாரின் நண்பரான முருகையன் கைது செய்யப்பட்டு ஞாயிற்றுக்கிழமை காவல் நிலையத்திற்குகொண்டுவரப்பட்டார். அதன்பின் அவர் மேல் விசாரணைக்காக வனத்துறை அலுவலகத்திற்கு அழைத்துச்செல்லப்பட்டார்.
முருகையன் கூறுகையில், இந்த விஷயத்தில் அய்யாறு வாண்டையாருக்கு எந்த விதமான தொடர்பும் இல்லை.முன்னாள் அமைச்சர் தனுஷ்கோடி ஆதித்தனுக்கும், ராதாபுரம் எம்.எல்.ஏ. அப்பாவுக்கும் இடையே மரம்வெட்டியதில் பங்கு பிரிப்பதில் ஏற்பட்ட தகராறு காரணமாக திட்டமிட்டு இந்த விஷயத்தைப்பெரிதுபடுத்தியுள்ளனர்.
மரம் வெட்டுவது ஒரு வருட காலமாக நடந்துவருகிறது. இதில் சட்டப்படி எந்தவிதமான குற்றமும் கிடையாதுஎன்றார் முருகையன்.
போலீசார் மேலும் 2 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications