அமைச்சர்களின் பதவிகள் பறிப்பு ஏன்?
சென்னை:
ஊழலற்ற ஆட்சியைத் தருவேன் என்ற அறிவிப்போடு ஆட்சியில் அமர்ந்த ஜெயலலிதாவின் அமைச்சரவையில்இருந்த 3 பேர் பதவிக்கு வந்ததும் வராததுமாக முறைகேடுகளில் ஈடுபட்டதால் தான் அவர்களை முதல்வர்ஜெயலலிதா தூக்கி எறிந்துள்ளார் எனத் தெரியவந்துள்ளது.
22 நாட்களில் இவர்கள் பதவி இழந்துள்ளனர்.
3 அமைச்சர்களின் பதவிப் பறிப்புக்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. அவற்றின் விவரம்:
அய்யாறு வாண்டையார்:
பறிக்கப்பட்ட பதவி: இந்து அறநிலையத்துறை அமைச்சர்
காரணம் 1: களக்காடு பகுதியில் வனப் பகுதியில் இருந்து இவரது உறவினர்கள் தேக்கு மரங்களைதிருட்டுத்தனமாக வெட்டிக் கடத்தி வந்தனர். இவர்களுக்கு அமைச்சரின் உதவியும் இருந்துள்ளது.
காரணம் 2: முன்னாள் காங்கிரஸ்காரரான அமைச்சரான பின்னரும் கூட தொடர்ந்து காங்கிரஸ்காரக்களையேதன்னுடன் அழைத்துக் கொண்டு திரிந்தது. அதிமுகவினரைப் புறக்கணித்தது.
நத்தம் விஸ்வநாதன்:
பறிக்கப்பட்ட பதவி: உணவுத்துறை அமைச்சர்
காரணம் 1: உணவுத்துறை அமைச்சராகப் பதவியேற்று 3 வாரங்கள் ஆன நிலையிலும் இவர் அதிகாரிகளையேசந்திக்கவில்லை. அமைச்சர் ஆன பந்தாவைக் கொண்டாடுவதிலேயே பொழுதைக் கழித்து வந்தார்.
காரணம் 2: திமுக ஆட்சி காலத்தில் வாங்கப்பட்டு கிடங்குகளில் வைக்கப்பட்டுள்ளது புழுத்துப் போன அரிசி எனஜெயலலிதா சட்டசபையில் கூறினார். இது தொடர்பாக ஜெயலலிதாவுக்கு தவறான தகவலை அமைச்சர் தந்ததாகத்தெரிகிறது.
காரணம் 3: அரிசியின் தரம் தொடர்பாக சட்டசபையில் நடந்த விவாதத்தில் அமைச்சர் சரியாக பதில்அளிக்கவில்லை. திமுக எம்.எல்.ஏக்கள் பேசிய பேச்சுக்கு சரியான பதிலை அமைச்சர் தரவில்லை
காரணம் 4: திமுகவினர் மீதான அரிசிக் கடத்தல் குற்றச்சாட்டுகள் தொடர்பான முழு விவரங்களைசேகரிக்கவில்லை.
காரணம் 5: முன்னாள் திமுக உணவுத்துறை அமைச்சர் நேருவின் ஆட்களுக்கே பருப்பு சப்ளை செய்ய உரிமைவழங்கியது.
மிக முக்கிய காரணம்: அரிசிக் கடத்தலில் தொடர்புடைய முக்கிய திமுக தலைகள் ஜெயராமனைத் தொடர்புகொண்டு அவரை உரிய முறையில் கவனிப்பதாக கூறியுள்ளனர். அதை ஏற்றுக் கொண்டு அவர்கள் மீது வழக்குகள்ஏதும் வந்துவிடாமல் தடுப்பதாக அமைச்சர் உறுதி அளித்ததார்.
பொள்ளச்சி ஜெயராமன்:
பறிக்கப்பட்ட பதவி: தொழில்துறை அமைச்சர்
காரணம் 1: திமுக ஆட்சியில் நடந்த கொப்பைரத் தேங்காய் ஊழலில் தொடர்புடைய நபர் அமைச்சரைக்கவனித்து அவரது ஆசிர்வாதத்தை பெற்றது ஜெயலலிதாவுக்குத் தெரியவந்தது. இதனால் இந்த ஊழல்தொடர்பாக அதிகாரிகளால் விசாரணை நடத்தக் கூட முடியவில்லை.
காரணம் 2: அக்னி ராஜரத்தினம் போன்ற எதையும் செய்யும் தொழிலதிபர்கள் அமைச்சருக்கு திடீர்நெருக்கமானது.
காரணம் 3: தொழிலபதிபர்கள் சங்கம் கொடுத்த டாடா குவாலிஸ் காரை வாங்கியது.
-
ரொம்ப மன உளைச்சல்.. மேடையிலேயே பதவியை ராஜினாமா செய்த அதிமுக நிர்வாகி.. கள்ளக்குறிச்சியில் பரபரப்பு -
பாஜக சிம்ப்ளி வேஸ்ட்.. திருமாவளவன் பெஸ்ட்.. புயலை கிளப்பிய வால்பாறை அதிமுக வேட்பாளர் ஆடியோ -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சொதப்பிட்டீங்களே.. இப்போ பாருங்க போக முடியல.. கடுப்பான விஜய்.. காரணம் புஸ்ஸி, ஆதவ்? என்னாச்சு? -
திடீரென வீடியோ வெளியிட்டு மதுரை மத்திய தொகுதி வேட்பாளர் சுந்தர் சி உருக்கம்! பிடிஆர் இருக்காரே!












Click it and Unblock the Notifications