கூட்டு அதிரடிப்படைக்கு தேவாரம் தலைவர்
சென்னை:
சந்தனக் கடத்தல் வீரப்பனைப் பிடிப்பதற்கான கூட்டு அதிரடிப் படையின் தலைவராக முன்னாள் டி.ஜி.பி. தேவாரம்நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழக முதல்வர் ஜெயலலிதா திங்கள்கிழமை இத்தகவலைத் தெரிவித்தார்.
வீரப்பனைப் பிடிப்பதற்காகப் பல புதிய திட்டங்களைத் தீட்டுவதற்காக சென்னையில் நடந்த கூட்டத்தில் இந்த முடிவுஎடுக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். வீரப்பனைப் பிடிக்கும் பணி விரைவில் தொடங்கும் என்றும் அவர்உயிருடன் பிடிக்கப்படுவார் என்றும் ஜெயலலிதா நம்பிக்கையுடன் கூறினார்.
தமிழகத்தின் சார்பாக முதன்மைச் செயலாளர் சங்கர், உள்துறை செயலாளர் நரேஷ் குப்தா, சிறப்பு அதிரடிப்படைத்தலைவர் தேவாரம், டிஜிபி ராஜகோபாலன் மற்றும் சிறப்பு அதிரடிப்படை ஐஜி விஜயகுமார் ஆகியோர் இந்தக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
கர்நாடக முதன்மைச் செயலாளர் தெரசா பட்டாச்சார்யா, உள்துறை செயலாளர் பிரகாஷ், டிஜிபி ஸ்ரீனிவாசன், சிறப்புஅதிரடிப்படைத் தலைவர் கெம்பையா ஆகியோர் அடங்கிய கர்நாடகக் குழுவும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டது.
வீரப்பனைப் பிடிப்பதற்கான முக்கியத் திட்டங்களைத் தீட்டுவதற்காக நடைபெற்ற இந்தக் கூட்டம் 30 நிமிடங்கள்வரை நீடித்தது. கூட்டு அதிரடிப்படையின் தலைவராக தேவாரம் தேர்ந்தெடுக்கப்பட்டதைக் கர்நாடகஅதிகாரிகளும் ஏற்றுக் கொண்டனர்.
தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சிப் பொறுப்பை ஏற்ற பின்னர், 2 மாநிலங்களிலுமே வீரப்பனைப் பிடிப்பதற்கானசிறப்பு அதிரடிப்படை தலைவர்கள் மாற்றப்பட்டுள்ளனர்.
இம்முறை எப்படியும் வீரப்பனைப் பிடித்தே தீருவோம் என்று பலத்த நம்பிக்கையுடன் கூறியுள்ளார் தமிழகமுதல்வர் ஜெயலலிதா. ஓய்வு பெற்ற முன்னாள் டி.ஜி.பி.யான தேவாரமும் வீரப்பனை மடக்கி விடுவோம் என்றுமீசையை முறுக்கிவிட்டு களத்தில் குதிக்கவிருக்கிறார்.
யு.என்.ஐ.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications