கோடீஸ்வரன் அரங்கு கலைக்கப்பட்டது
சென்னை:
எம்.ஜி.ஆர். பிலிம் சிட்டியில் கோடீஸ்வரன் நிகழ்ச்சிக்காக போட்டப்பட்டிருந்த அரங்கு திங்கள்கிழமைகலைக்கப்பட்டது.
தனியார் தொலைக்காட்சியான சன் டிவியில், நடிகை ராதிகாவின் ராடன் டிவி நிறுவனம் கோடீஸ்வரன் நிகழ்ச்சியைநடத்துகிறது. இந்த நிகழ்ச்சி கடந்த 6 மாதமாக நடந்து வருகிறது. சென்னை எம்.ஜி.ஆர். பிலிம் சிட்டியில் இந்தநிகழ்ச்சிக்கான அரங்கு அமைக்கப்பட்டிருந்தது.
இந்த நிகழ்ச்சியை ராதிகாவின் கணவர் நடிகர் சரத்குமார் நடத்திவந்தார். ராதிகா தி.மு.க.வைச் சேர்ந்தவர் என்பதால்அவர் எம்.ஜி.ஆர். பிலிம் சிட்டியில் நிகழ்ச்சியை நடத்த முந்தைய தி.மு.க. அரசு அனுமதி அளித்தது.
தற்போது தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் எம்.ஜி.ஆர். பிலிம் சிட்டியில் அமைக்கப்பட்டிருந்தகோடீஸ்வரன் நிகழ்ச்சியின் அரங்கு கலைக்கப்பட்டுவிட்டது.
எம்.ஜி.ஆர் பிலிம் சிட்டியில் 20 நாட்களுக்குமேல் தொடர்ந்து நிகழ்ச்சி நடத்தப்படக்கூடாது என்ற விதி உள்ளது.அந்த விதியை மீறி தொடர்ந்து இங்கு 6 மாதகாலமாக கோடீஸ்வரன் நிகழ்ச்சி நடந்து வருவதால் அந்த அரங்கைகலைக்குமாறு ராடன் நிறுவனத்திற்கு அரசு நோட்டீஸ் அனுப்பியது.
இதைத் தொடர்ந்து கோடீஸ்வரன் நிகழ்ச்சி இந்த அரங்கில் நடத்தப்படுவது நிறுத்திக் கொள்ளப்பட்டது. அரங்குதிங்கள்கிழமை கலைக்கப்பட்டது.
திரைப்பட கலை இயக்குநர் தோட்டா தரணிதான் இந்த அரங்கை வடிவமைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications