ரூபாய் நோட்டில் காதல் விடுதூது: வாலிபர் கைது
கரூர்:
நூறு ரூபாய் நோட்டில் "ஐ லவ்யூ எழுதி காதல் தூது விட்ட வாலிபரைப் போலீசார் கைது செய்தனர்.
கரூர் அருகே உள்ள வர்ணதீத்தம் என்ற ஊரைச் சேர்ந்தவர் வீரய்யா. இவர் வனத்துறை அலுவலகத்தில் பணியாற்றிவருகிறார். இவரது மகள் சங்கீதா (17), அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் படித்து வருகிறார். அதே பகுதியைச்சேர்ந்த மோகன் (19) என்பவர் சங்கீதாவைக் கேலியும் கிண்டலும் செய்து வந்துள்ளார்.
இதையறிந்த வீரய்யா, மோகனைக் கூப்பிட்டு எச்சரித்து அனுப்பியுள்ளார். ஆனால் அதனைஅலட்சியப்படுத்தினார் மோகன். மேலும் சங்கீதாவை அதிமாகத் தொல்லைப் படுத்த ஆரம்பித்தார். வீரய்யாமோகனை அழைத்து மிரட்டியும் பார்த்தார். ஆனால் மோகனின் கிண்டல் குறையவில்லை.
இந்நிலையில், சங்கீதா தனது தோழி தமிழ்ச்செல்வியுடன் பள்ளிக்குச் சென்று கொண்டிருந்தார். அப்போது, அந்தவழியாக வந்த மோகன், அவரைப் பின் தொடர்ந்துள்ளார். மேலும், சங்கீதாவை நோக்கி நூறு ரூபாய் நோட்டைவீசியுள்ளார்.
ரூபாய் நோட்டை வீசியதால் அதனைக் கவனித்த சங்கீதாவின் பார்வையில், நோட்டில் அவரது பெயர்எழுதப்பட்டிருந்ததையும் கவனித்தார். அதில், சங்கீதா, ஐலவ்யூ என இருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார்.
உடனே அந்த நோட்டை எடுத்துச் சென்று தந்தையிடம் புகார் கூறினார். அவரது தந்தை வீரய்யா போலீசில் புகார்செய்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து மோகனைக் கைது செய்தனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications