மசூதியில் பதுங்கிய தீவிரவாதிகள் சுட்டுக்கொலை
ஸ்ரீநகர்:
காஷ்மீர் ஷான்கான்ஸ் பகுதியில் உள்ள ஜாமியா மசூதியில் பதுங்கியிருந்த தீவிரவாதிகள் திங்கள்கிழமை சுட்டுக்கொல்லப்பட்டனர்.
காஷ்மீரின் மேற்கு பகுதியான ஷான்கான்ஸ் கிராமத்தில் லக்ஷார்-இ- தொய்பா தீவிரவாதிகள் ஞாயிற்றுக்கிழமைஒரு வீட்டில் சென்று பதுங்கியிருப்பதை அறிந்த பாதுகாப்புப்படை வீரர்கள் அவர்களைப் பிடிப்பதற்காக அந்தவீட்டிற்கு சென்றனர்.
அப்போது தீவிரவாதிகளுக்கும் பாதுகாப்புப்படையினருக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடந்தது. இதில்பாதுகாப்புப்படை வீரர் ஒருவர் கொல்லப்பட்டார். 2 பேர் படுகாயமடைந்தனர்.
இந்நிலையில் தீவிரவாதிகள், அந்த வீட்டிற்கு அருகே உள்ள ஜாமியா மசூதிக்கு ஓடிச் சென்று பதுங்கிக் கொண்டனர்.மசூதியை ராணுவத்தினர் சுற்றி வளைத்தனர். தீவிரவாதிகளுக்கும், ராணுவத்திற்கும் இடையே கடும சண்டைநடந்தது.
ராணுவத்தினர் தீவிரவாதிகளை சரணடையுமாறு கூறினர். ஆனால் தீவிரவாதிகள் சரணடையாமல் சண்டையைத்தொடர்ந்தனர். இதைத் தொடர்ந்து, மசூதிக்கு தண்ணீர் மற்றும் மின் விநியோகம் நிறுத்தப்பட்டது.
இதைத் தொடர்ந்து, ராணுவத்தின் சிறப்புக் கமாண்டோ பிரிவினர் திங்கள்கிழமை காலை திடீரென்று மசூதிக்குள்புகுந்தனர். அப்போது அங்கு நடந்த கடும் துப்பாக்கிச் சண்டையில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.இரவில் தப்ப முயன்ற மேலும் 2 இரண்டு தீவிரவாதிகளும் பாதுகாப்புப்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இது குறித்து ராணுவ செய்தித் தொடர்பாளர் தெரிவிக்கையில், அதிகபட்ச பொறுமையை கடைபிடித்தோம்.அவர்களை சரணடையச் சொன்னோம் அவர்கள் மறுத்துவிட்டனர். அவர்களை வெளியே வரவழைக்க கண்ணீர்புகை குண்டுகளை பயன்படுத்தினோம் அதுவும் பலனளிக்கவில்லை. தப்பிச் செல்ல முயன்ற தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். மசூதியும் சிறதளவு சேதமடைந்துள்ளது என்றார்.
பதுங்கிய தீவிரவாதிகளை பிடிப்பதற்காக ராணுவம் மசூதியை முற்றுகையிட்டது கடந்த 12 வருடங்களில் இதுஇரண்டாவது முறை என்பது குறிப்பிடத்தக்கது.
யு.என்.ஐ., ஐ.ஏ.என்.எஸ்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications