ரஷ்யாவில் இந்தியத் திருமணம்: கூட்டம் அலைமோதல்
மாஸ்கோ:
ரஷ்யாவில் நடந்த ஒரு இந்தியத் திருமண நிகழ்ச்சியைக் காண்பதற்கு ஏராளமான ரஷ்யர்கள் வந்து குவிந்தனர்.
ரஷ்யாவில் உள்ள இந்தியத் தூதரகத்தில் வேலை செய்பவர்கள் சங்க உறுப்பினர்கள் நடத்திய இந்தத்திருமணத்தைக் காண ரஷ்ய நாட்டினர்கள் மட்டுமல்லாது, வேறு சில வெளிநாட்டினரும் வந்திருந்தனர். இவர்களில்பெரும்பாலானவர்கள் வெவ்வேறு தூதரகங்களைச் சேர்ந்த பெண்கள்.
இந்தியக் கலாச்சாரத்திற்கே உரிய வகையில் இந்தத் திருமணம் சிறப்பாக நடைபெற்றது. மணப்பெண்ணுக்குவளையல் அணிவிக்கும் நிகழ்ச்சியான "களிரா"விலிருந்து, மணமக்கள் இருவரும் திருமணம் முடிந்ததும் அக்னியைமும்முறை வலம் வரும் நிகழ்ச்சி வரை அனைத்து திருமண நிகழ்ச்சிகளையும் அனைவரும் வெகுவாக ரசித்துப்பார்த்து மகிழ்ந்தனர்.
அதிலும் முக்கியமாக, மணமகளை மணமகனிடம் மணமகளின் தந்தை ஒப்படைக்கும் "கன்னியாதானம்" எனப்படும்நிகழ்ச்சியைப் பார்த்து ஹாலில் உள்ள அனைவருமே உணர்ச்சி வசப்பட்டு விட்டனர். திருமணத்தின் ஒவ்வொருநிகழ்ச்சியின் முக்கியத்துவத்தையும் அதற்கான பொருளையும் அவ்வப்போது மைக்கில் சொல்லிக் கொண்டேஇருந்தார்கள். அதனால், அங்கே இங்கே என்று எங்கும் திரும்பாமல் அனைவரும் மணமேடையிலேயே கவனமாகஇருந்தனர்.
ஷெனாய் கருவியின் மெல்லிய பின்னணி இசையில், இந்த வடக்கிந்தியத் திருமணத்தைக் கண்டு மெய் மறந்திருந்தரஷ்யர்களுக்கு, பெண்கள் நடத்திய சில இந்திய நடன நிகழ்ச்சிகளும் உள்ளத்தைக் கொள்ளை கொள்வதாகஅமைந்துவிட்டது போலும்!
வெறும் சடங்கு, சம்பிரதாயம், சாஸ்திரத்தோடு நில்லாமல் இந்தியத் திருமணம் ஒரு பெரும் சமுதாய நிகழ்ச்சியாகவேஇருக்கிறது என்பதைச் சொல்லிச் சொல்லி மாய்ந்து போனார் ஒரு பல்கலைக்கழக மாணவர். மாஸ்கோ சிட்டியூனிவர்சிட்டியில் இந்திய வரலாறு பற்றி ஆய்வு செய்து வரும் அந்த மாணவர், தன் வாழ்க்கையிலேயே இந்தத்திருமண நிகழ்ச்சி மறக்க முடியாத ஒரு நிகழ்ச்சியாக அமைந்துவிட்டது என்று புல்லரித்துப் போய் கூறினார்.
ரஷ்ய அதிபர் மாளிகையான கிரெம்ளினில் இருந்து கூப்பிடு தூரத்தில் உள்ள ரஷ்யன் ஸ்டேட் லைப்ரரிஹாலில்தான் இந்த வடக்கிந்தியத் திருமணம் நடந்தது.
ஐ.ஏ.என்.எஸ்.
-
வீரர்களே இல்லாமல் ரஷ்யாவை அலறவிடும் உக்ரைன்! புதினே எதிர்பார்க்காத சீக்ரெட் ஆயுதம் இறக்கிய ஜெலன்ஸ்கி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications