சமத்துவபுரம் ரேஷன் கடைகள் மூடல்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழகம் முழுவதும் உள்ள சமத்துவபுரங்களில் திறக்கப்பட்ட ரேஷன் கடைகள் மூடப்பட்டு வருகின்றன.

முந்தைய திமுக அரசின் திட்டங்களைப் படிப்படியாகச் செயலிழக்கச் செய்வதில் தற்போதைய ஜெயலலிதா அரசுதீவிரமாக ஈடுபட்டுள்ளது. செயல்படாத திட்டங்களாகத் தொடங்கி வைக்கப்பட்டு, திமுகவினராலேயே அதிகம்அக்கறை காட்டப்படாத திட்டங்கள் அனைத்தும் ஒன்றன்பின் ஒன்றாக ஒழிக்கப்பட்டு வருகின்றன.

கடந்த மாதம் அதிமுக ஆட்சியில் அமர்ந்ததுமே, திமுக தொடங்கி வைத்த உழவர் சந்தைகளை மூடப் போவதாகஆளுநர் அறிக்கை மூலமாகவே அதிரடி அறிக்கையை வெளியிட்டார் தமிழக முதல்வர் ஜெயலலிதா.

இதைத் தொடர்ந்து மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் விவசாயிகள் இதை எதிர்த்து குரல் கொடுக்கஆரம்பித்தனர். எதிர்க் கட்சிகளின் உதவியோடு, போராட்டத்திலும் சாலை மறியலிலும் விவசாயிகள் ஈடுபட்டனர்.

நிலைமை மேலும் தீவிரமடையாமல் இருக்க வேண்டும் என்று கருதிய ஜெயலலிதா, செயல்படாமல் இருக்கும்உழவர் சந்தைகள் மட்டுமே மூடப்படும் என்று அறிவித்து, பிரச்சினைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்தார்.

தமிழ்நாட்டில் உள்ள சமத்துவபுரங்களின் எண்ணிக்கை தற்போது "செஞ்சுரி"யையும் தாண்டிவிட்டது. இங்குஅனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டன. அவற்றுள் ஒன்றுதான் சமத்துவபுர ரேஷன் கடை.

சிவில் சப்ளை கார்ப்பரேஷன் பொருட்களை வழங்க, கடை நிர்வாகத்தை ஏற்று நடத்தியது கூட்டுறவுத் துறை.ரேஷன் கார்டுகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப, வாரத்திற்கு 2 அல்லது 3 நாட்கள் இந்த ரேஷன் கடைகள் செயல்பட்டுவந்தன.

தற்போது அடுத்த அதிரடியாக சமத்துவபுரங்களில் உள்ள ரேஷன் கடைகளை மூடப் போவதாக அறிவித்து,கடந்த 2வாரங்களில் அங்கொன்றும் இங்கொன்றுமாக ரேஷன் கடைகள் மூடப்பட்டு வருகின்றன.

இதோ திறந்துவிடும்.... அதோ திறந்துவிடும்.... என்று ரேஷன் கடை மீண்டும் திறக்கப்படும் என்று எதிர்பார்த்தசமத்துவபுர மக்களுக்கு ஏமாற்றம்தான் மிஞ்சியது. தமிழகம் முழுவதும் தற்போது சமத்துவபுர ரேஷன் கடைகள்மூடப்படுவது சிறிது சிறிதாக ஆரம்பித்துள்ளது.

இது சம்பந்தமாக கூட்டுறவுத்துறை உயர் அதிகாரிகளைக் கேட்ட போது, பொருட்கள் ரிட்டர்ன் கொடுக்கபணியாட்கள் சென்றிருப்பதால் கடை அடைக்கப் பட்டிருப்பதாகத் தோன்றும். கடைகளை அடைக்கச் சொல்லி எந்தஉத்தரவும் வரவில்லை என்று அவர்கள் கூறினர்.

பணியாளர்கள் திரும்புவதற்கு இரண்டு வாரங்களுக்கு மேலாகவா ஆகும் என்று கேட்டால், பெரியமவுனத்தைத்தான் கூட்டுறவுத்துறை அதிகாரிகள் பதிலாகத் தந்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+