21ம் நூற்றாண்டை இந்தியா அலங்கரிக்கும்: கிளிண்டன் புகழாரம்
நியூயார்க்:
இந்தியாவில் நடக்கும் நிகழ்வுகள்தான் 21ம் நூற்றாண்டை அலங்கரிக்கப் போகின்றன என்று அமெரிக்கமுன்னாள் அதிபர் பில் கிளிண்டன் புகழ்ந்துள்ளார்.
குஜராத் பூகம்பப் பேரழிவிற்கு நிதி திரட்டும் ஒரு முயற்சியாக, அமெரிக்க வாழ் இந்தியர்கள் அமைப்பு ஒன்றுநடத்திய இரவு விருந்தின் போதுதான் கிளிண்டன் இவ்வாறு கூறினார்.
அமெரிக்க அதிபராக இருந்த போது, இந்தியாவிற்கு வருகை தந்த கிளிண்டனை இந்தியர்களின் கலாச்சாரமும்உபசரிப்பும் வெகுவாகவே கவர்ந்து விட்டன. அதனாலேயே பூகம்பம் ஏற்பட்ட குஜராத்திற்கு கடந்த ஏப்ரல் மாதம்திரும்பவும் விசிட் செய்தார்.
பூகம்பத்தில் பாதிக்கப்பட்ட பூஜ் பகுதிகளையும், மக்களையும் கண்டு கலங்கிய கிளிண்டன், அமெரிக்காதிரும்பியதுமே இவர்களுக்காக நிதி திரட்டும் பணியில் சுறுசுறுப்பாக இறங்கினார். அமெரிக்காவில் வாழும்இந்தியர்கள் பூகம்ப நிதி கொடுக்க வேண்டும் என்று கிளிண்டனே வேண்டுகோள் விடுக்க ஆரம்பித்தார்.
இதையடுத்து, பூகம்ப நிவாரண நிதி திரட்டுவதற்காக ஒரு விருந்தை நடத்த, கடந்த பிப்ரவரி மாதம்ஆரம்பிக்கப்பட்ட அமெரிக்க வாழ் இந்தியர்கள் அமைப்பு முடிவுசெய்தது. பில் கிளிண்டன் இந்த விருந்தில் கலந்துகொள்ள வேண்டும் என்றும் அவ்வமைப்பு அழைப்பு விடுத்தது. பெருத்த மகிழ்ச்சியுடன் கிளிண்டனும் விருந்தில்கலந்து கொண்டார்.
விருந்தின் போது, குஜராத் பூகம்பப் பேரழிவு சம்பந்தமான 40 புகைப்படங்கள் இடம்பெற்ற புகைப்படக் கண்காட்சிஒன்றும் நடைபெற்றது. இந்தக் கண்காட்சியைக் குத்துவிளக்கேற்றித் துவக்கி வைத்தார் கிளிண்டன்.விருந்தையொட்டி, இசை நிகழ்ச்சிக்கும் பேஷன் ஷோவுக்கும் இந்த அமெரிக்கவாழ் இந்திய அமைப்பு ஏற்பாடுசெய்திருந்தது.
இந்த இரவு விருந்தில் சுமார் 700 பேர் கலந்து கொண்டனர். இந்த விருந்தின்போது மட்டும், ரூ.6.5 கோடி நிதிதிரட்டப்பட்டது. இந்த ஆண்டு இறுதிக்குள் ரூ.50 கோடி நிதி திரட்டுவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஐ.ஏ.என்.எஸ்.
-
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications