காங்.அறக்கட்டளை: வாழப்பாடி வழக்கு
சென்னை:
காங்கிரஸ் அறக்கட்டளையை தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் மூப்பனாரிடமிருந்து மீட்டு புதியநிர்வாகிகள் நியமிக்க வேண்டும் என்று கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக ராஜீவ் காங்கிரஸ் தலைவர்வாழப்பாடி ராமமூர்த்தி வழக்குத் தொடர்ந்துள்ளார்.
இதுதொடர்பாக தாக்கல் செய்துள்ள மனுவில் அவர் கூறியிருப்பதாவது:
கடந்த 1954ம் ஆண்டு தமிழ்நாடு காங்கிரஸ் அறக்கட்டளை துவக்கப்பட்டது. 7 டிரஸ்டிகள் அடங்கிய இந்தஅறக்கட்டளைதான் அனைத்து நிர்வாகத்தையும் கவனித்துக் கொள்கிறது.
1996ம் ஆண்டு காங்கிரஸ் கட்சி பிளவுபட்டது. இதையடுத்து மூப்பனார் காங்கிரஸ் கட்சியின் அனைத்துச்சொத்துக்களையும் கைப்பற்றினார். அதன் பிறகு அறக்கட்டளை நிர்வாகிகள் 3 பேரைப் புதிதாக நியமித்தார்.மூப்பனார், சி. சுப்ரமணியம், ராமசாமி உடையார் ஆகியோர் புதிதாக நியமிக்கப்பட்ட நிர்வாகிகள். இவர்களில்உடையாரும், சி.சுப்ரமணியமும் இறந்து விட்டனர். அதன் பிறகு புதிதாக டிரஸ்டிகள் நியமிக்கப்படவில்லை.
இந்த அறக்கட்டளையின் கட்டுப்பாட்டில்தான் காமராஜர் அரங்கம், சத்தியமூர்த்தி பவன் ஆகியவை உள்ளன.மொத்தம் ரூ.10 கோடி அளவிலான சொத்து அறக்கட்டளையின் நிர்வாகத்தில் உள்ளது.
துவக்கம் முதல் இந்த அறக்கட்டளையின் நிர்வாகத்தில் காங்கிரஸ் கட்சி முழுமையான அளவில் பங்கு பெறவில்லை.கட்சித் தலைவர்கள் மாற்றம், கட்சிப் பிளவுகள் ஆகியவை காரணமாக டிரஸ்டிகள் அமைப்பதில் பிரச்சினை இருந்துவருகிறது. இதை மாற்ற புதிதாக டிரஸ்டிகளை நியமிக்க உத்தரவிட வேண்டும் என்று வாழப்பாடி தனது மனுவில்கூறியுள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications