கோவை, நீலகிரியில் பருவமழை துவங்கியது
கோவை:
கோவை, நீலகிரி மாவட்டத்தில் பருவமழை தீவிரமடைந்துள்ளது. நீலகிரியில் பல இடங்களில் காற்றுடன் பெய்தமழையில் மரங்கள் வீழ்ந்தன. மின்சாரம் தடை பட்டது.
கோவை, நீலகிரி மாவட்டங்களில் தற்போது பருவமழையின் காரணமாக தூறல்கள் தொடங்கியுள்ளன.அவ்வப்போது பெய்யும் இந்த மழையால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
கோவையில் கடந்த 4 நாட்களாக தூறல் விழுந்த வண்ணம் உள்ளது. ஆனால் கனமழை இல்லை. சிறு சிறுதூறல்களின் காரணமாக பொதுமக்களின் நடமாட்டம் குறைந்துள்ளது.
காலையில் துவங்கும் இந்த தூறல் இரவு வரை நீடிக்கிறது. இதனால், கோவையின் சூழலில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.இரவு நேரங்களில் இதமான குளிரும் நீடிக்கிறது.
நீலகிரி மாவட்டத்தில், பருவமழை நன்றாகவே உள்ளது. இந்த மழையால், தேயிலை விவசாயிகள்பயன்பெறுகின்றனர். தேயிலை மற்றும் தோட்டப் பயிர்கள் தழைக்கத் தொடங்கியிருப்பதால், நீலகிரி புதுப்பொலிவுடன் உள்ளது.
ஆனால், கடந்த 2 நாட்களாக காற்றுடன் பெருமழை பெய்து வருகிறது. இதனால் மரங்கள் வலுவிழந்து கீழேசாய்ந்துள்ளன. இதனால், பல இடங்களில் மின்தடை ஏற்பட்டுள்ளது. பல கிராமங்களில் உள்ள நீரேற்றுநிலையங்களில் தண்ணீர் ஏற்றப்படவில்லை. எனவே, இந்த கிராமங்களிலுள்ள பொதுமக்கள் மழை பெய்தும்தண்ணீரின்றி தவிப்பிற்குள்ளாகியுள்ளனர்.
இப்பிரச்னையைத் தீர்க்க மாவட்ட நிர்வாகம் முழு அளவிலான நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது.
-
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications