ஜெ. அறைக்கு போராடிச் சென்ற நிருபர்கள்
சென்னை:
தமிழகத் தலைமைச் செயலகத்தில் உள்ள முதல்வர் ஜெயலலிதாவின் அறையை அடைவதற்குள் பத்திரிக்கைநிருபர்களுக்குப் போதும் போதும் என்றாகி விட்டது.
புதன்கிழமை காலை 11 மணிக்குப் பத்திரிகையாளர்களைச் சந்தித்து, முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிடப்போவதாக, அதற்கு முந்தைய நாளிலேயே ஜெயலலிதா கூறியிருந்தார்.
இதையொட்டி, புதன்கிழமை காலையில் நூற்றுக்கணக்கான செய்தியாளர்கள், போட்டோகிராபர்கள் தலைமைச்செயலகத்தில் குவியத் தொடங்கினர். செய்தியாளர்கள் கூட்டம் அதிகம் இருந்ததால், போட்டோகிராபர்கள் உள்ளேஅனுமதிக்கப்படவில்லை. தவிர, ஒரு பத்திரிக்கைக்கு ஒரு நிருபர் மட்டுமே என்கிற ரீதியில்தான் உள்ளேஅனுமதிக்கப்பட்டனர்.
இப்படிப் போராடிச் சென்ற நிருபர்களும், முதல்வரின் அறைக்குச் செல்வதற்குள், "செக்போஸ்ட்" மாதிரிஆங்காங்கே தடுத்து நிறுத்தப்பட்டனர். இந்த இடங்களிலுள்ள கதவுகளைத் திறக்கும் வரை, பலத்தஇடிபாடுகளுக்கிடையே நிருபர்கள் காத்திருந்தனர்.
வெகுநேரக் காத்திருப்புக்குப் பின்னர், டிவி கேமரா மேன்கள் மட்டும் உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டனர்.அவர்களுடன் அந்தந்த டிவி நிருபர்களும் செல்ல அனுமதிக்கப்பட்டனர். கடைசி நிமிடத்தில்தான் மற்ற பத்திரிகைநிருபர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
மணிக்கணக்கில் காத்திருந்து, முதல்வரின் அறைக்குச் சென்ற பின்னரும், நின்று கொண்டேதான் பேட்டி -எடுத்தனர்.அவர்கள் உட்காருவதற்கான எந்த வசதியும் அளிக்கப்படவில்லை.
பேட்டி முடிந்ததும், ஆங்காங்கே தாங்கள் தடுக்கப்பட்டது பற்றி நிருபர்கள் ஜெயலலிதாவிடம் கேட்டனர். அதற்குபதிலளித்த அவர், முதல்வர் அறை என்பது மிகவும் முக்கியமானது. அதிகாரப்பூர்வ சந்திப்புகளுக்கு மட்டுமேஇதைப் பயன்படுத்த வேண்டும். ஆனால், முந்தைய முதல்வர் தினசரி இந்த அறையில் பத்திரிகை நிருபர்களைச்சந்தித்து, தவறான அணுகுமுறையைக் கடைப்பிடித்தார்.
இதே தவறை நானும் செய்ய முடியாது. இது புதிய அரசு. இங்கு சில மாற்றங்களைச் செய்து வருகிறோம். சிறிதுகாலம் பொறுத்திருங்கள். நிருபர்கள் சந்திப்புக்கு என மாற்று ஏற்பாடுகள் செய்யப்படும் என்றார்.












Click it and Unblock the Notifications