ஒரு ஆட்டோவில் 20 குழந்தைகள்: டிரைவர்கள் கைது
சென்னை:
ஆட்டோக்களில் விதிகளுக்குப் புறம்பாக 20க்கும் மேற்பட்ட பள்ளிக் குழந்தைகளை ஏற்றிச் சென்ற 300ஆட்டோக்களை சென்னை நகர போலீஸார் பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.
தமிழகத்தில் பள்ளிகள் திறந்து விட்டன. அப்பா, அம்மாக்கள், பாட்டிகள், பள்ளி ஆயாக்களுடன் பள்ளிச் சிறார்கள்பள்ளி சென்று வருகிறார்கள். இதுதவிர ஸ்கூல் பஸ், ஸ்கூல் வேன் உள்பட பல வாகனங்களிலும் அவர்கள் சென்றுவருகிறார்கள். இதை விட முக்கியமான வாகனமான ஆட்டோக்களில் காலை நேரங்களில் பள்ளிக் குழந்தைகள்நிரம்பி வழிகிறார்கள்.
ஒவ்வொரு ஆட்டோவிலும் குறைந்தது 15 குழந்தைகள் வரை அடைத்துச் செல்லப்படுகின்றனர். படுவேகமாகடிரைவர்கள் செல்வதாலும், அதிக குழந்தைகளை அடைத்துச் செல்வதாலும் குழந்தைகளின் உடல் நலனுக்கும்உயிருக்கும் ஆபத்து வர வாய்ப்புள்ளது.
ஆட்டோக்களில் அதிக அளவில் குழந்தைகளை அடைத்துச் செல்வது குறித்து, சென்னை நகர போக்குவரத்துபோலீஸாருக்குப் பல புகார்கள் வந்தன. இதையடுத்து இணை கமிஷனர் ஜாபர் சேட், சந்தீப் ராய் ரத்தோர்ஆகியோர் தலைமையில் திவீர சோதனை நடத்தப்பட்டது.
இதில், 20க்கும் மேற்பட்ட குழந்தைகளை அடைத்து ஏற்றிச் சென்றதாக 296 ஆட்டோக்களை பிடித்து போலீஸார்பறிமுதல் செய்தனர். அந்த ஆட்டோக்களின் டிரைவர்களும் கைது செய்யப்பட்டனர்.
இதுதவிர பள்ளிக் குழந்தைகளை ஏற்றிச் சென்ற 80 மீன் பாடி வண்டிகளையும் (சென்னையிலேயே மிக மோசமானஉயிர்க் கொல்லி வாகனம் இதுதான்), மோட்டார் பொருத்தப்பட்ட ரிக்ஷாக்களையும் போலீஸார் பறிமுதல்செய்தனர்.
இந்த சோதனை தொடர்ந்து நடத்தப்படும் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications