வீரப்பன்: சிறுமுகை காட்டுப்பகுதியில் திடீர் போலீஸ் ரெய்டு
கோவை:
சிறுமுகை காட்டுப் பகுதியில் கோவை போலீஸ் கமிஷனர் மற்றும் மாவட்ட எஸ்.பி. ஆகியோர் திடீர் விசிட்அடித்தனர். வீரப்பன் நடமாட்டம் குறித்து நேரடி விசாரணை மேற்கொண்டனர்.
கோவை மாநகரப் போலீஸ் கமிஷனரும், மாவட்ட டி. ஐ.ஜி யாகப் பொறுப்பில் உள்ள நரேந்திரபால் சிங், மற்றும்மாவட்ட எஸ்.பி., சொக்கலிங்கம் ஆகியோர் காட்டுப்பகுதிக்கு வியாழக்கிழமை சென்றனர். அங்கு பல இடங்களில்ஆய்வு நடத்தினர்.
வீரப்பன் நடமாட்டம் முன்பு இருந்த இடங்களான லிங்காபுரம், வச்சினம், காந்தவயல், வேடர்காலனி, பாலப்பட்டிஆகிய இடங்களில் இவர்கள் சுற்றுப் பயணம் செய்தனர். அப்போது அங்குள்ள மக்களிடையே நேரடியாக வீரப்பன்நடமாட்டம் குறித்து தெரிந்து கொண்டனர்.
இதையடுத்து, அதிரடிப்படையின் தலைவராகப் பொறுப் பேற்றிருக்கும் தேவாரம், இந்தப் பகுதிகளில் உள்ளநிலவரம் குறித்து கேட்டறியும் வாய்ப்பு உள்ளதாகத் தெரிகிறது. இப் பகுதிகளில் விரைவில் தேவராம்சுற்றுப்பயணம் மேற்கொள்வார் என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications