ஜெ. நியமனம்: ஜனாதிபதியிடம் ஆளுநர் விளக்கம்
டெல்லி:
ஜெயலலிதாவை தமிழக முதல்வராக நியமித்தது பற்றி இந்திய ஜனாதிபதி கே.ஆர். நாராயணனிடம் தமிழகஆளுநர் பாத்திமா பீவி விளக்கம் அளித்துள்ளார்.
முதல்வர் ஜெயலலிதா பதவியேற்றதில் இருந்தே, தமிழக ஆளுநரைத் திரும்பப் பெற வேண்டும் என்று திமுகவும்தமிழக பாஜகவும் மத்திய அரசை வற்புறுத்தி வந்தன.
இந்நிலையில் திடீரென்று வியாழக்கிழமை பாத்திமா பீவி டெல்லி கிளம்பிச் சென்றது பரபரப்பை ஏற்படுத்தியது.பல்வேறு ஊகங்களையும் கிளப்பியது. மவுலானா அபுல்கலாம் ஆசாத் கட்டுரைப் போட்டிக்குத் தலைமை தாங்கப்போவதாகவும் வேறொரு செய்தி கூறியது.
டெல்லிக்குச் சென்ற பாத்திமா பீவி, சுமார் 30 நிமிடங்கள் ஜனாதிபதியைச் சந்தித்துப் பேசியதாகக் கூறப்படுகிறது.இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று ஜனாதிபதி மாளிகை வட்டாரங்கள் தெரிவித்தன.
ஆனால், ஜெயலலிதாவை முதல்வராகப் பதவிப் பிரமாணம் செய்து வைத்த சூழ்நிலை பற்றித்தான் ஜனாதிபதியிடம்பாத்திமா பீவி விளக்கமளித்ததாகக் கூறப்படுகிறது.
சென்னை திரும்புவதற்கு முன், உள்துறை அமைச்சர் அத்வானியையும் பாத்திமா பீவி சந்திப்பார் என்று தெரிகிறது.
அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்துடன் தமிழக ஆளுநரின் பதவிக் காலம் முடிகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
காவி வண்ணத்தில் வள்ளுவர்., ஆளுநர் செய்தது அயோக்கியத்தனம்! வெடித்துக் கிளம்பிய வைகோ! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications