கருணாநிதி, அழகிரி மீது கொலைமிரட்டல் வழக்கு
முதல்வர் கருணாநிதி, அவரது மகன் மு.க.அழகிரி ஆகியோரின் தூண்டுதலின்படிதான் காளிமுத்து என்னை கொலைசெய்ய முயற்சித்தார்.
காளிமுத்து பேசியதற்கு என்னிடம் ஆதாரம் உள்ளது. எனவே இது குறித்து விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என கூறியுள்ளார்.
இந்த புகாரின் பேரில் சென்னை எழும்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இது தொடர்பாக சென்னை போலீஸ் கமிஷனர் முத்துக்கருப்பன் செய்தியாளர்களிடம் கூறுகையில், எழும்பூர் காவல்நிலையத்தில் ஹுசைனி கொடுத்துள்ள புகாரை வாங்கி வைத்துள்ளோம். அந்த புகார் மேலோட்டமாக இருக்கும்காரணத்தால், அது பற்றி விரைவில் தேவையான நடவடிகை எடுக்கப்படும்.
தமிழக சிறையில் முஸ்லிம் கைதிகளை கொடுமைப்படுத்தியாக முன்னாள் முதல்வர் கருணாநிதி, முன்னாள்உள்துறைச் செயலாளர் சாந்தா ஷீலா நாயர், முன்னாள் டி.ஜி.பி சர்மா உள்பட சிறைத்துறை அதிகாரிகள் மீது குற்றம்சாட்டப்படுள்ளது குறித்து விசாரணை செய்யுமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
குற்றம் சுமத்தப்பட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் மீது விசாரணை மேற்கொள்ளப்படும்என்றார்.
ஹுசைனி பேட்டி:
2 வருடங்களுக்கு முன் ஜீன்ஸ் படத்தின் ஆடியோ, வீடியோ பாதுகாப்பு உரிமையை அந்த படத்தின் தயாரிபபாளர்என்னிடம் கொடுத்தார்.
அப்போது அன்றைய முதல்வர் மு.க.அழகரியின் ஆதரவுடன். இந்த படத்தின் போலி வி.சி.டிக்கள் மதுரையில்இருப்பதாக கேள்விப்பட்டு. போலீசாருடன் சென்று அந்த கடைகளை சோதனை செய்தேன்.
இதனால் கோபமடைந்த அழகிரி இனி மதுரைக்கு வந்தால உன்னை கொன்றுவிடுவேன் என என்னை மிரட்டினார்.
சென்னை பர்மா பஜாரிலும் ஜீன்ஸ் படத்தின் போலி வி.சி.டிக்கள் விற்பனை செய்யப்பட்டு வந்தது. அதைகைப்பற்ற போலீஸ் கமிஷனர் காளிமுத்துவிடம் உதவி கேட்டேன்.
அவர் என்னை திட்டியதோடு மட்டுமின்றி, என்னை கொன்றுவிடுவதாக கூறி துப்பாக்கியைக் காட்டி மிரட்டினார்.ரவுடி ஆசைத்தம்பியை சுட்டது போல் உன்னையும் சுட்டுவிடுவேன் என மிரட்டினார்.
கருணாநிதியின் மகன் அழகிரி, போலீஸ் கமிஷனர் காளிமுத்து ஆகியோர் தீவிரவாதிகள் மூலம் என்னை கொல்லசதி செய்தனர்.
தி.மு.க. ஆட்சியில் இருந்ததால் என்னால் அப்போது புதார் செய்ய முடியவில்லை. அதனால் இப்போது புகார்செய்துள்ளேன்.
இப்போது கூட என் புகார் ஆதாரமற்றது என போலீஸ் கமிஷனர் கூறியதாக செய்திகள் வந்துள்ளது. அவர் என்புகாரை சரியாக படிக்கவில்லை என கருதுகிறேன்.
மதுரை போலீஸ் கமிஷனராக இருந்த சுப்பமணியம், மதுரை மாவட்ட ஆட்சி தலைவராக இருந்த தங்கவேலு,அண்ணாநகர் போலீஸ் துணை கமிஷனராக இருந்த சிவனாண்டி, சென்னை நகர மேயர் மு.க. ஸ்டாலின் ஆகியோர்மீதும் புகார் செய்யவிருக்கிறேன் என கூறினார்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications