அ.தி.மு.க.- காங். கூட்டணி: தொடருமா? இல்லையா?
சென்னை:
காங்கிரசுடனான கூட்டணி முறிந்து விட்டது என ஜெயலலிதா கூறிய பின்னும், கூட்டணி இன்னமும் தொடர்கிறதுஎன தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் இளங்கோவன் கூறியுள்ளார்.
நடந்து முடிந்த தமிழக சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், த.மா.கா., பா.ம.க,கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. இந்த கூட்டணி தேர்தலில் வெற்றி பெற்றது.
இதற்கிடையே, பிரதமர் வாஜ்பாயை சந்திப்பதற்காக ஜெயலலிதா டெல்லி சென்றிருந்த போது, கூட்டணிகட்சிகளுடனான உறவு தேர்தலுடன் முறிந்து விட்டது என தெரிவித்திருந்தார். ஆனாலும் தொடர்ந்துஅ.தி.மு.கவுடன் கூட்டணி வைத்துக் கொள்ள வேண்டும் என தமிழக காங்கிரஸ் விரும்புகிறது.
வரவிருக்கும் உள்ளாட்சி தேர்தலிலும் அ.தி.மு.கவுடனான கூட்டணி தொடர வேண்டும் என தமிழக காங்கிரஸ்தலைவர் இளங்கோவன் விருப்பம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் சென்னையில் வியாழக்கிழமைசெய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
அடுத்த மாதம் 18ம் தேதி, காமராஜர் பிறந்தநாள் விழா தமிழக காங்கிரசின் சார்பில் கொண்டாடப்படவிருக்கிறது.
இந்த விழாவை திருநெல்வேலியில் சிறந்த முறையில் கொண்டாடுவது குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது.இந்த விழாவில் கலந்து கொள்ள அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கும் அழைப்புஅனுப்பப்பட்டிருக்கிறது.
இந்த விழாவில் த.மா.கா. தலைவர் மூப்பனார் உள்ளிட்ட பல தலைவர்கள் கலந்து கொள்வார்கள்.
தமிழகத்கில், காங்கிரசுடனான உறவு முறிந்துவிட்டது என ஜெயலலிதா கூறியது அவரது தனிப்பட்டகருத்து.தேர்தலில் அ.தி.மு.கவுடன் அமைக்கப்பட்ட கூட்டணி எங்கள் கூட்டணி இன்னமும் தொடர்கிறது.
வரவிருக்கும் உள்ளாட்சி தேர்தலிலும் இந்த கூட்டணி நீடிக்க வேண்டும் என்பதுதான் என் விருப்பம். இதுபற்றிஅகில இந்திய காங்கிரஸ் தலைவர்கள் முடிவெடுப்பார்கள் என கூறினார்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ்












Click it and Unblock the Notifications