மகாலிங்கம் கல்லூரியில் பைபர் ஆப்டிக்ஸ் இன்டர்நெட் வசதி
கோவை:
தமிழகத்திலேயே முதல் முறையாக பொள்ளாச்சி டாக்டர் மகாலிங்கம் கல்லூரி ரூ. 50 லட்சம் செலவில் பைபர்ஆப்டிக்ஸ் கேபிள் மூலமாக இன்டர்நெட் வசதியை ஏற்படுத்திக் கொண்டுள்ளது.
கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் டாக்டர் மகாலிங்கம் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்தக் கல்லூரியில்பைபர் ஆப்டிக்ஸ் கேபிள் மூலம் இணைப்பு பெறுகிறது. இந்த இணைப்பு கொச்சியிலிருந்து இந்தக் கல்லூரிபெற்றுள்ளது.
இது குறித்து கல்லூரி முதல்வர் ராமசாமி கூறியதாவது:
அதிவேக இன்டர்நெட் இணைப்பைப் பெற டாக்டர் மகாலிங்கம் கல்லூரி முன்னிலைப் படுத்தப்பட்டுள்ளது. இந்தகல்லூரியில் படிக்கும் மாணவர்கள் பயன்பெறும் வகையில், இந்த இன்டர்நெட் இணைப்பு கல்லூரி மற்றும் விடுதிஆகியவை முழுவதிலும் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வேகம் குறையாத பிரவுசிங்கைமாணவர்கள் பயன்படுத்திக் கொள்வர்.
டாக்டர் மகாலிங்கம் கல்லூரி, கனடா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் இருக்கும் பல்கலைக் கழகங்களுடன் மிகநெருங்கிய கல்வித் தொடர்பினைக் கொண்டுள்ளது. தற்போது வழங்கப்பட்டுள்ள இன்டர்நெட் இணைப்பு மூலம்அங்குள்ள பாடங்களை எளிதில் மாணவர்கள் பெற முடியும்.
அதோடு பாடத்தில் ஏற்படும் சந்தேகங்களை உடனுக்குடன் "சாட்டிங் வசதி மூலம் பெற முடியும். வெளிநாட்டுக்கல்லூரிகளுடன் ஏற்படுத்திக் கொண்ட ஒப்பந்த்ததின் அடிப்படையில் இங்கு பயின்ற மாணவர்கள் வெளிநாட்டுக்கல்லூரிகளில் படித்து வருகின்றனர்.
இவர்களிடம் நேரடியாகப் பாடங்களை தெரிந்து கொள்ள இந்த இன்டர்நெட் வசதி உதவும். தமிழகத்திலேயேமுதல் முறையாக ரூ. 50 லட்சம் செலவில் பைபர் ஆப்டிக்ஸ் கேபிள் மூலம் இந்த இணைப்பு பெறப்பட்டுள்ளதுகுறிப்பிடத்தக்கது என்றார்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications