சென்னைக்கு இன்று முதல் நெய்வேலி குடிநீர்
சென்னை:
சென்னை நகருக்கு வெள்ளிக்கிழமைமுதல் நெய்வேலியிலிருந்து லாரிகள் மூலம் கொண்டு வரப்படும் தண்ணீர்விநியோகம் செய்யப்படவுள்ளது.
சென்னை நகரில் கடுமையான குடிநீர்த் தட்டுப்பாடு நிலவுவதால் நெய்வேலி மற்றும் ஈரோட்டிலிருந்து லாரிகள்,ரயில்கள் மூலம் குடிநீர் கொண்டு வந்து விநியோகம் செய்யப்படும் என்று முதல்வர் ஜெயலலிதாஅறிவித்திருந்தார்.
அதன்படி வெள்ளிக்கிழமை முதல் நெய்வேலி தண்ணீர் விநியோகம் துவங்கியது. தினசரி 500 லாரிகள் மூலம்நெய்வேலியிலிருந்து குடிநீர் கொண்டு வரப்பட்டு விநியோகம் செய்யப்படவுள்ளது.
நெய்வேலி அருகேயுள்ள கங்கைகொண்டான், பெரியகுப்பம் ஆகிய பகுதிகளிலிருந்து இந்தத் தண்ணீர் எடுத்தவரப்படுகிறது. இதற்காக நெய்வேலி மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் 28 ராட்சத குடிநீர் விவசாய கிணறுகள்அடையாளம் காணப்பட்டுள்ளன.
இதுதவிர, ஈரோட்டிலிருந்து ரயில் மூலம் குடிநீர் எடுத்து வரப்படவுள்ளது. வருகிற 20ம் தேதி ஈரோட்டிலிருந்துகிளம்பும் குடிநீர் ரயில் 21ம் தேதி சென்னை வில்லிவாக்கம் ரயில் நிலையத்தை அடைகிறது.
இந்த ரயிலில் மொத்தம் 50 தண்ணீர் டேங்கர்கள் இருக்கும். ஒவ்வொரு டேங்கரும் 25,000 லிட்டர் தண்ணீர்கொள்ளளவு கொண்டது. மொத்தம் 12.5 லட்சம் லிட்டர் தண்ணீர் ஈரோட்டிலிருந்து கொண்டு வரப்படவுள்ளது.
வில்லிவாக்கத்திலிருந்து குழாய்கள் மூலம் நகருக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படும். இதற்காக வில்லிவாக்கம்பகுதியில் உள்ள குடிநீர்க் குழாய்களை பழுதுபார்க்கும் பணியை குடிநீர் வடிகால் வாரியம் மேற்கொண்டுள்ளது.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications