ஜெ. படம் மாட்டுவதில் தகராறு: கரூரில் பதட்டம்
கரூர்:
முதல்வர் ஜெயலலிதா படம் மாட்டுவது தொடர்பாக எழுந்த பிரச்சினை அடிதடி, இழுபறியில் முடிந்தது. இதுதொடர்பாக மாவட்ட ஊராட்சி மன்றக் குழுத் தலைவர், துணைத் தலைவர் உள்பட அதிமுக உறுப்பினர்களும் கைதுசெய்யப்பட்டனர்.
கரூர் மாவட்ட ஊராட்சி மன்றக் குழுக் கூட்ட அரங்கில் முதல்வர் ஜெயலலிதா படம் மாட்டுவது தொடர்பாகப்பிரச்சினை ஏற்பட்டது. இந்த ஊராட்சி மன்றக் குழுத் தலைவராக லட்சுமி துரைசாமி (திமுக) இருந்து வருகிறார்.துணைத் தலைவராக கே. உமாபதி (திமுக)யும் பொறுப்பில் உள்ளனர்.
அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் அரசு அலுவலகங்களில் முதல்வர் ஜெயலலிதா படத்தை மாட்டுவதில் அதிமுகவினர்தீவிரம் காட்டி வந்தனர். இதே போன்று கரூர் மாவட்ட ஊராட்சி மன்ற அலுவலகத்தில் அதிமுக உறுப்பினர்களானஎன்.எஸ். கிருஷ்ணன் மற்றும் கே. சுப்ரமணியம் ஆகியோர் ஜெயலலிதா படத்தை மாட்டுவதற்கான முயற்சியில்இறங்கினர்.
இதற்கு ஊராட்சி மன்றத் தலைவராக இருந்துவரும் லட்சுமி துரைசாமி கடும் எதிர்ப்புத் தெரிவித்தார். ஊராட்சிமன்றத்தில் எந்த முதல்வரின் படமும் வைக்கப்படவில்லை. எனவே, இங்கு முதல்வர் ஜெயலலிதாவின் படத்தையும்மாட்டக் கூடாது எனத் தடுத்தார்.
ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் உமாபதியும் படத்தை மாட்ட எதிர்ப்புத் தெரிவித்தார். படத்தை மாட்டவேண்டுமானால், தலைவரின் அனுமதியைப் பெற வேண்டும் எனக் கூறினார்.
ஆனால் சுப்ரமணியம், படத்தை மாட்டியே தீருவதாகக் கூறி மன்ற கூட்டத்தில் இருந்த கடிகாரத்தை எடுத்து விட்டுஅங்கு ஜெயலலிதாவின் படத்தை மாட்ட முற்பட்டார். அப்போது லட்சுமி துரைசாமி, அந்தப் படத்தைப் பிடுங்கமுயற்சித்தார். அது முடியாமல் போகவே, தனது கையால் அப்படத்தின் கண்ணாடியை உடைத்தார். இதில்அவருக்கு கையில் காயம் ஏற்பட்டது.
இதையடுத்து அங்கிருந்த மேஜையின் மீது ஏறிக் குதித்த கிருஷ்ணன், லட்சுமி துரைசாமியின் அறைக்கு ஓடினார்.அங்கிருந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் படத்தை எடுத்து உடைத்தார். இதனால், பரபரப்பு ஏற்பட்டது.
மேலும், அதிமுக உறுப்பினர்கள் தலைவரின் சேரைத் தூக்கி வீசி உடைத்தனர். தலைவர் அறையில் இருந்தடெலிபோன் உட்பட பல பொருட்களைச் சூறையாடினர். இது குறித்த தகவலையும் செல்போன் மூலம் தங்களதுகட்சியினருக்குத் தெரிவித்துக் கொண்டிருந்தனர், அதிமுக உறுப்பினர்கள். எனவே, அதிமுக தொண்டர்கள் அங்குகூடத் தொடங்கினர். இதனால் பதட்டம் உருவானது.
இந்த சம்பவம் குறித்து உடனடியாகப் போலீசாருக்குத் தகவல் தெரிய வந்தது. போலீசார் உடனடியாக சம்பவஇடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கிருந்த தொண்டர்களைக் கலையச் செய்தனர். பின்னர் சம்பவம் குறித்துவழக்குப் பதிவு செய்தனர். அதிமுக உறுப்பினர்கள் கிருஷ்ணன், சுப்ரமணியத்தின் மீதும் வழக்குப் பதிவு செய்துஅவர்களைக் கைது செய்தனர்.
இந்நிலையில், திமுகவினர் நடந்த சம்பவம் குறித்து அடுத்த கட்ட நடவடிக்கைக்காக ஆலோசனைக் கூட்டம்நடத்தினர். அப்போது அங்கு வந்து போலீசார் மாவட்ட ஊராட்சித் தலைவர் லட்சுமி துரைசாமி மற்றும்உமாபதியைக் கைது செய்ய வேண்டும் எனக் கூறினர். அவர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் இருந்ததால், அவரைக்கைது செய்ய எதிர்ப்புக் கிளம்பியது. பின்னர் மாலையில் லட்சுமி துரைசாமியைப் போலீசார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவுன் அவரை ஜீப்பில் ஏற்ற போலீசார் முயன்றனர். அப்போது அவர் மயக்கமடைந்தார்.இதையடுத்து கட்சியினரின் ஒரு காரில் அவர் ஏற்றப்பட்டு அழைத்துச் செல்லப்பட்டார். அவ்வாறு செல்லும்போதுபோலீசாரின் ஜீப், லட்சுமி துரைசாமி சென்ற காரின் மீது உரசியது. இதனால் இருதரப்பபினருக்கும் வாக்குவாதம்ஏற்பட்டது.
இதன் பின்னர், மாவட்ட ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் கே. உமாபதியும் கைது செய்யப்பட்டார். எனவே,கரூரில் இந்த சம்பவம் திமுகவினரிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. லட்சுமி துரைசாமிஅரவக்குறிச்சி ஒன்றிய திமுக செயலராக உள்ளார். உமாபதி கிருஷ்ணாபுரம் ஒன்றிய திமுக செயலராக உள்ளார்.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications