சுதாகரனுக்கு கோடிக்கணக்கில் பணம் ஏது? கருணாநிதி
சென்னை:
கைது செய்யப்பட்டுள்ள சுதாகரனிடம் உள்ள கோடிக்கணக்கான பணம் யாருடையது? என கருணாநிதி கேள்விஎழுப்பியுள்ளார்.
சென்னையில் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களுக்கு கருணாநிதி அளித்த பேட்டி:
சுதாகரன் கைது செய்யப்பட்டுள்ளது குறித்து எனக்கு எதுவும் தெரியாது. அவரிடம் கோடிக்கணக்கில் பணம்இருப்பதாக பத்திரிக்கைகளில் செய்தி வந்துள்ளது. அந்த பணம் யாருடையது என்பதும் எனக்கு தெரியாது.
அரிசி சேமித்து வைத்ததில் ரூ 65 கோடியளவுக்கு அரசுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது என ஜெயலலிதா கூறியுள்ளார்.
அதிக அளவில் அரிசி சேமித்து வைத்திருக்கும் காரணத்தால் 10 சதவிகிதம் வரை சேதம் அடைய வாய்ப்புள்ளதுஎன சில நாளிதழ்கள் கூறியுள்ளன. இது உங்களுக்கு புரியும்.
நாங்கள் 14 லட்சம் டன் அரிசி கையிருப்பில் இருப்பதாக தெரிவித்ததை முதலில் மறுத்தனர். பின்பு ஆற்காடுவீராசாமி விளக்கமளித்த போது உணவு அமைச்சர் விஸ்வநாதன் புழுத்துப்போன அரிசி என்றார்.
அந்த அம்மாவும் 3 முறை புழுத்துப்போன அரிசி என கூறினார். அதிகாரிகளை வைத்து விசாரித்த போது இதுபொய் என தெரிந்து போனது.
ஒன்றிரண்டு இடங்களில் கருப்பு, சிவப்பு அரிசிகள் இருக்கலாம். ஆனால் 14 லட்சம் டன் அரிசியும்கெட்டுப்போகவில்லை. இப்போது ரூ 65 கோடி நஷ்டம் என சொல்கிறார்கள். இதை நீங்கள் நம்ப மாட்டீர்கள்.
தி.மு.க. ஆட்சியில் விவசாயிகளுக்கான கடன் வட்டியில் 7 சதவிகிதத்தை தள்ளுபடி செய்தோம். அதற்கு மேல் 5சதவிகிதம் சேர்த்து 12 சதவிகித வட்டியை அவர்கள் தள்ளுபடி செய்துள்ளனர்.
13 சதவிகிதம் என இருந்த வட்டியை 12 சதவிகிதம் என குறைத்தது தி.மு.க.தான். இப்போது அந்த 12சதவிகிதத்தையும் தள்ளுபடி செய்திருப்பது வரவேற்கத்தக்கது.
ஆசிரியர் மாற்றங்களுக்கு கவுன்சிலிங் நடத்தப்படவிருப்பதாக வெளிவந்துள்ள அறிவிப்பு பற்றி எதிர்க்கட்சிதலைவர் அன்பழகன் விரிவான அறிக்கை கொடுத்திருக்கிறார். அதில் எல்லாமே அடங்கியுள்ளது.கிராமங்களிலுள்ள பள்ளிகள் பாதிக்கப்படாமல் இருக்க வேண்டும் என்றார் கருணாநிதி.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications