சுலோவேகியாவில் காணாமல் போன 17 இந்தியர்கள்
லண்டன்:
சுலோவேகியா நாட்டிலிருந்து செக் குடியரசுக்கு ஆற்றில் குதித்துத் தப்பிச் செல்ல முயன்ற 20 பேரில் 3 பேர்பிடிபட்டனர். மீதி 17 பேரையும் சுலோவேகியா போலீஸார் தேடி வருகின்றனர்.
காணாமல் போன 17 பேரும் இந்தியர்கள் என்று நம்பப்படுகிறது. இவர்கள் ஆற்றில் மூழ்கி இறந்து போனார்களாஅல்லது செக் குடியரசுக்கே தப்பித்துச் சென்று விட்டார்களா என்பது பற்றி இன்னும் தெரியவில்லை.
இவர்கள் அனைவரும் சட்டவிரோதமாக இங்கிலாந்துக்குச் செல்லவிருந்தார்கள் என்று பிடிபட்ட 3 பேரைவிசாரித்தபோது தெரிய வந்தது. இந்த 3 பேரில் ஒருவர் இந்தியர் என்றும் போலீஸார் கூறுகின்றனர்.
சமீபகாலமாக, சட்டவிரோதமாக இங்கிலாந்துக்குச் செல்லும் இந்தியர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.இவர்கள் அனைவரும் இங்கிலாந்தில் அடிமைகளாக வேலை பார்ப்பதற்காக விற்கப்படுகின்றனர்.
இவர்களை விற்பதற்கென்று ஒரு பெரிய கூட்டமே இங்கிலாந்தில் இயங்கி வருகிறது. ஒரு மனிதனுக்கு விலை ரூ.5லட்சம் முதல் ரூ.7 லட்சம் வரை இருக்கும் என்று கூறப்படுகிறது. பெரும்பாலும் கடல் வழியாகத்தான் இந்த மனிதக்கடத்தல் நடைபெறுகிறது.
அவர்களால் இங்கிலாந்து வருவதற்குள் போதும் போதும் என்றாகிவிடும். சும்மாவா, சட்டவிரோதமாக அல்லவாவருகிறார்கள்? வழியிலேயே எதிர்பாராதவிதமாக பலரும் இறந்து விடுவார்கள். என்னதான் இவ்வளவுஆபத்துக்கள் இருந்த போதிலும், மக்கள் கடல் மார்க்கமாக ஊடுருவிக் கொண்டுதான் இருக்கிறார்கள். அப்படியேவிற்கப்பட்டுக் கொண்டும் இருந்தார்கள்.
பெரும்பாலும் இந்தியாவின் பஞ்சாபிலிருந்தும் குஜராத்திலிருந்தும் வரும் மக்கள்தான் இங்கிலாந்தில்அடிமைகளாக விற்கப்படுகின்றனர். இவர்களுக்கு ஒரு மணி நேரத்துக்கு 2 டாலர்கள் வீதம் சம்பளம்கொடுக்கப்படுகின்றது என்றும் கூறப்படுகிறது.
கடந்த மார்ச் மாதம், இங்கிலாந்துப் போலீஸார் நடத்திய அதிரடி சோதனையின் போது, மனிதர்களைக் கடத்திவிற்கும் ஒரு கும்பல் பிடிபட்டது. வடக்கு இங்கிலாந்தின் லெய்செஸ்டரில் இயங்கி வந்த இந்தக் கும்பலிடமிருந்துநூற்றுக்கணக்கான போலி பாஸ்போர்ட்டுகளும், இதர போலி ஆவணங்களும் கைப்பற்றப்பட்டன.
இந்த மனிதக் கடத்தலில் கைது செய்யப்பட்ட இந்தியர்கள் அனைவரும் தற்போது இங்கிலாந்து ஜெயிலில் கம்பிஎண்ணிக் கொண்டிருக்கிறார்கள்.
இங்கிலாந்துக் கால்வாய் அருகேதான் இதுபோன்ற மனிதக் கடத்தல்கள் நடைபெறுகின்றன என்பதைக்கேள்விப்பட்டதும், ஏராளமான போலீஸார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர். இதனால், தற்போது வெளிநாட்டினர்அவ்வழியாக சட்டவிரோதமாக இங்கிலாந்துக்குள் ஊடுருவுவது மிகவும் குறைந்துள்ளது.
ஐ.ஏ.என்.எஸ்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications