அமெரிக்கா செல்கிறார் சோனியா காந்தி
டெல்லி:
அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான சோனியா காந்தி ஒரு வாரசுற்றுப்பயணமாக ஜூன் 23 ம் தேதி அமெரிக்கா செல்கிறார்.
சோனியா காந்தி தனது அமெரிக்க சுற்றுப்பயணத்தின்போது அமெரிக்க செனட் உறுப்பினர்கள், தொழிலதிபர்கள்ஆகியோரை சந்தித்துப் பேசுவார்.
அமெரிக்கா செல்லும் சோனியா காந்தியுடன் முன்னாள் மத்திய நிதியமைச்சர் மன்மோகன் சிங், முன்னாள்வெளியுறவுத்துறை இணை அமைச்சர் நட்வார் சிங் ஆகியோரும் செல்கின்றனர்.
இவர்கள் தவிர காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் ஜெய்ராம் ரமேஷ் மற்றும் மணி சங்கரய்யர் ஆகியோரும்சோனியாவுடன் அமெரிக்கா செல்கின்றனர்.
சோனியாவின் அமெரிக்க சுற்றுப்பயணம் குறித்து நட்வார் சிங் கூறுகையில், சோனியாவுடன் அமெரிக்காசெல்லும்போது அமெரிக்காவின் புதிய அதிபர் ஜார்ஜ் வில்லியம் புஷ்ஷை நேரில் சந்தித்துப் பேசபவோம்.
இந்தியாவின் பொருளாதார நிலை, வெளிநாட்டுக் கொள்கைகள் ஆகியவை குறித்து அவரிடம் எடுத்துக்கூறுவோம் என்றார்.
சோனியா அங்குள்ள இந்தியர்கள் மத்தியில் உரையாற்றுவார். நியுயார்க் மற்றும் வாஷிங்டனில் இந்திய-அமெரிக்கவெளியுறவுத்துறை கவுன்சில் மற்றும் இந்திய அமெரிக்க நட்புறவு சங்க பிரதிநிதிகள் கூட்டத்தில் கலந்துகொள்கிறார்.
இந்திய வர்த்தக சம்மேளன (அமெரிக்க பிரிவு) உறுப்பினர்கள் சங்கத்தின் முன்னாள் வெளியுறவுத்துறை இணைசெயலாளர் ஹென்றி கிஸெங்கரையும் சந்தித்துப் பேசுகிறார்.
அமெரிக்க செனட் சபை துணை செயலாளர் ரிச்சர்டு ஆர்மிடேஜையும் சோனியா காந்தி சந்தித்துப் பேசுகிறார்.கடந்த மாதம் டெல்லி வந்திருந்த போது அவர் சோனியா காந்தியை சந்தித்துப் பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.
காங்கிரஸ் கட்சி வட்டாரங்கள் சோனியா காந்தியின் அமெரிக்க சுற்றுப்பயணம் குறித்துக் கூறுகையில், இத்தாலியில்பிறந்தவரான சோனியா காந்தி 116 வருடங்கள் பழமை வாய்ந்த காங்கிரஸ் கட்சிக்குத் தலைவராக உள்ளார்.
பிரதமர் வாஜ்பாய்க்கு சரியான எதிர்க்கட்சித் தலைவராகவும் இருக்கிறார். அவர் அமெரிக்கா சுற்றுப்பயணம்மேற்கொள்வது மிகவும் மகிழ்ச்சியடைய வைக்கிறது என்றார்.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான பிருத்விராஜ் சவான் என்பவர் கூறுகையில், சோனியா காந்திஅமெரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொள்வது குறித்து காங்கிரஸ் கட்சித் தொண்டர்கள் அனைவரும் மிகவும்மகிழ்ச்சியுடன் உள்ளனர்.
அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டபின் சோனியா வெளிநாட்டு சுற்றுப்பயணம்மேற்கொள்வது இதுவே முதல்முறை. அமெரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இவர் காங்கிரஸ் கட்சி மற்றும்வெளிநாட்டுக் கொள்கைகள் மற்றும் பொருளாதாரக் கொள்கைகள் குறித்துப் பேசவிருக்கிறார் என்றார்.
முன்னதாக, கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவராக சோனியா காந்திதேர்ந்தெடுக்கப்பட்டார். சமீபத்தில் 5 மாநிலங்களில் நடந்த சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெருவாரியானவெற்றி பெற்றது.
அசாம், கேரளா, பாண்டிச்சேரியில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியது. தற்போதுஇந்தியாவில் உள்ள 28 மாநிலங்களில் 11 மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி ஆட்சி புரிந்து வருகிறது.
1968 ம் ஆண்டு சோனியா காந்தி, ராஜீவ் காந்தியைத் திருமணம் செய்து கொண்டு நேரு குடும்பத்து மருமகளானார்.ராஜீவ் காந்தி இந்திய பிரதமராக இருந்த போது சுட்டுக் கொல்லப்பட்டார்.
ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்டபின் சோனியா காந்தி 1998 ம் ஆண்டு வரை அரசியலை விட்டு விலகியேஇருந்தார். 1998 ம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது காங்கிரஸ் கட்சிக்காக தேர்தல் பிரச்சாரம்மேற்கொண்டார்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications