ஓமனில் பொதுமன்னிப்பு பெற இந்தியர்கள் போட்டி
துபாய்:
ஓமனில் அனுமதியில்லாமல் வாழும் இந்தியர்கள் பொதுமன்னிப்புக் கோரும் முயற்சியில் முழுமூச்சாகஇறங்கியுள்ளனர்.
இந்தியா உள்பட பல நாடுகளிலிருந்து அனுமதியில்லாமல் ஓமனில் வசித்து வரும் மக்களுக்கு பொதுமன்னிப்புவழங்கி அவர்களை சொந்த நாடுகளுக்கு அனுப்ப பொதுமன்னிப்பு வழங்கவுள்ளதாக சமீபத்தில் அரசு அறிவித்தது.
பொதுமன்னிப்பு பெற்று அனுமதியில்லாமல் வாழ்ந்தவர்கள் தங்கள் நாடுகளுக்குச் செல்லலாம் என்றும், ஏப்ரல் 21ம் தேதி முதல் ஜூன் 16 ம் தேதி வரை பொதுமன்னிப்பு பெறலாம் என்றும் அரசு அறிவித்திருந்தது.
பொதுமன்னிப்பு பெறும் கடைசிநாளான சனிக்கிழமை பொதுமன்னிப்பு வழங்கும் அலுவலகத்தின் முன்இந்தியர்களின் கூட்டம் அலைமோதியது. ஓமன் அரசு பொதுமன்னிப்பு வழங்கும் நாட்களின் எண்ணிக்கையைஅதிகரிப்பது குறித்து எதுவும் கூறவில்லை என்பது வேறு விஷயம்.
இருப்பினும் இதுவரை 2,000 இந்தியர்கள் ஓமன் அரசிடம் பொதுமன்னிப்பு பெற்று இந்தியா திரும்பியுள்ளனர்.
இதுகுறித்து ஓமனில் உள்ள இந்திய தூதரக கவுன்சிலர் அப்துல் காலிக் கூறுகையில், பொதுமன்னிப்புப் பெறும்இந்தியர்களுக்காக 4,500 பயண தஸ்தாவேஜூகள் கொடுக்கப்பட்டன. இவைகள் தவிர பாஸ்போர்ட்டுகளும்கொடுக்கப்பட்டன.
அவர்கள் குடியேற்றத்துறை அலுவலகத்துக்குச் சென்று பாஸ்போர்ட்டுக்களை காட்டி பரிசோதனை செய்தபின்இந்தியா திரும்பலாம்.
6,000 முதல் 7,000 வரை இந்தியர்கள் பொதுமன்னிப்பு பெற்று தங்கள் நாடுகளுக்குத் திரும்பவோ அல்லதுஓமனிலேயே நிரந்தரமாகத் தங்கவோ செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஓமனில் 3, 00,000 தொழிலாளர்கள் அனுமதியில்லாமல் வாழ்ந்து வருகிறார்கள். இவர்கள் அனைவரும் பலநாடுகளைச் சேர்ந்தவர்கள். இவர்களில் இந்தியர்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளனர். பாகிஸ்தானியர்கள் 1, 00,000 பேரும், வங்கதேசத்தினர் 1,20,000 பேரும், பிலிப்பைன்ஸைச் சேர்ந்தவர்கள் 10, 000 பேரும் உள்ளனர்என்றார் காலிக்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications