விஸ்வரூபமெடுக்கிறது சென்னை குடிநீர் பிரச்சினை
சென்னை:
சென்னை நகரில் குடிநீர்ப் பற்றாக்குறை அதிகரித்துள்ள நிலையில், நகரின் பல பகுதிகளில் தொடர்ந்து சாலைமறியல் உள்ளிட்ட பல போராட்டங்கள் அதிகரித்து வருகின்றன.
சென்னை நகரில் குடிநீர்ப் பற்றாக்குறை விஸ்வரூபமெடுத்து வருகிறது. பல பகுதிகளில் குடிநீர் பிரச்சினை மிகமோசமாக உள்ளது. இந்தப் பகுதிகள், தண்ணீர் லாரிகளைப் பார்த்து பல நாட்களாகி விட்டன.
தண்ணீர் இல்லாமல் காலி குடங்களுடன் தெருவில் காத்துக் கிடப்பது பெண்களுக்கு வழக்கமாகி, பழக்கமாகிவிட்டது. திடீரென வரும் குடிநீர் லாரிகளில் தண்ணீரைப் பிடிப்பதற்கு நடக்கும் அடிதடி, கார்கில் போர்க்களத்தைநினைவுபடுத்தும்.
சென்னை நகரில் சில பகுதிகளில் மட்டுமே வீடுகளுக்கு குடிநீர்க் குழாய் இணைப்பு உள்ளது. அதிலும் கூட தினசரிதண்ணீர் வருவதில்லை. வாரத்தில் சில நாட்கள் மட்டுமே குடிநீர் விநியோகம் உண்டு. பிற பகுதிகளில் குடிநீர்லாரிகளை மட்டுமே நம்பி மக்கள் இருக்கிறார்கள்.
தற்போது நெய்வேலியிலிருந்து லாரிகள் மூலம் குடிநீர் கொண்டு வர அரசு ஏற்பாடு செய்துள்ளது. மேலும் ரயில்மூலம் குடிநீர் கொண்டு வர ஏற்பாடுகள் நடந்து கொண்டுள்ளன.
இந்த நிலையில் தண்ணீர் கோரி பொதுமக்கள் சாலைகளுக்கு வரத் துவங்கி விட்டனர். காலிக் குடங்களுடன்சாலைமறியல் போராட்டங்கள் நடப்பது சாதாரணமாகி விட்டது. தினசரி நகரில் ஏதாவது ஒரு பகுதியில் பெண்கள்காலிக் குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டு தண்ணீர் கோரி வருகின்றனர்.
சனிக்கிழமை பம்மல், எம்.ஜி.ஆர். நகர் ஆகிய பகுதிகளில் பொதுமக்கள் காலிக்குடங்களுடன் சாலை மறியல்நடத்தினர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீஸார் விரைந்து வந்து பெண்களைசமாதானப்படுத்தி கலைந்து போகச் செய்தனர்.
நிலைமை மோசமாவதற்குள் அரசு உரிய நடவடிக்கை எடுத்து தண்ணீர்ப் பிரச்சினைக்கு ஒரு முடிவு கட்ட வேண்டும்என்று பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications