எம்எல்ஏவிடம் ரூ.2 லட்சம் கேட்டு வீரப்பன் மிரட்டல்
ஈரோடு:
பாரதிய ஜனதா எம்எல்ஏவிடம் 2 லட்ச ரூபாய் கேட்டு சந்தனக் கடத்தல் வீரப்பன் கடிதம் எழுதியுள்ளார்.
கர்நாடக மாநிலம், சாம்ராஜ் நகர் தொகுதி எம்எல்ஏவாக இருப்பவர் குருசாமி. இவருக்கு கன்னடத்தில்எழுதப்பட்டிருந்த கடிதத்தில் வீரப்பன் கூறியிருப்பதாவது:
நான்தான் வீரப்பன் எழுதுகிறேன். எனக்கு ரூ. 2 லட்சம் ரூபாய் தேவைப்படுகிறது. இந்தப் பணத்தை போவிதளபுராமலையில் உள்ள மாதேஸ்வரன் கோயிலில் கொண்டு வந்து வைக்க வேண்டும். வரும்போது போலீசாரின்உதவியை நாடினால், கடும் விளைவுகளைச் சந்திக்க வேண்டியிருக்கும். என்னைப் பற்றி உங்களுக்குத் தெரியும்.வாட்டாள் நாகராஜ் முகவரியையும் கொடுக்கவும்.
என்னிடம் பணம் இல்லாததால், உங்களிடம் கேட்டுள்ளேன். சாக்குப் பையில் பணத்தைக் கொண்டுவந்து,கோவிலில் வைக்கவும்.
முதன் முதலாக உங்களைத் தொந்தரவு செய்வதற்கு மன்னிக்கவும். இனி உங்களுக்கத் தொந்தரவு கொடுக்கமாட்டேன் என வீரப்பன் கடிதத்தில் கூறியுள்ளார்.
கடிதத்தில் வீரப்பன் கையெழுத்துக்குப் பதிலாக, 4 விரல் ரேகைகள் மட்டுமே காணப்படுகின்றன. இதனால், அதுவீரப்பனிடம் இருந்துதான் வந்ததா என்று போலீஸார் குழம்புகின்றனர்.
கடிதம் வந்ததைத் தொடர்ந்து, எம்எல்ஏ குருசாமிக்குப் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
-
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம்












Click it and Unblock the Notifications