காத்திருப்போர் பட்டியலில் 33 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள்
சென்னை:
தமிழகத்தில் 33 ஐஏஎஸ் அதிகாரிகள் கடந்த 2 வாரங்களாகக் கட்டாயக் காத்திருப்பில் இருக்கின்றனர். இவர்களில்22 மூத்த அதிகாரிகளும் அடங்குவர்.
இந்த 33 அதிகாரிகளில் பலர், திமுக ஆட்சிக் காலத்தில் முக்கிய பதவிகளை வகித்தவர்கள். இவர்களில் 3ல் ஒருபங்கினர் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள்.
சென்னையிலேயே தங்கியிருக்க வேண்டும் என்ற கட்டாயத்தில், அவர்களுடைய வீட்டிலேயே இருக்கும் இந்தஅதிகாரிகளுக்கு அலுவலகம், கார் வசதி ஒன்றும் கிடையாது, எந்த வேலையும் பார்க்க மாட்டார்கள். ஆனால்ஊதியத்திற்கு ஒன்றும் அவர்களுக்குக் குறைவில்லை.
16 ஆண்டுகள் பணிமுடித்து அரசுச் செயலாளர் அந்தஸ்தில் சிறப்பு நிலை ஊதியம் பெறும் அதிகாரிகளில் 22 பேர்தற்போது எந்தப் பணியும் இல்லாமல் உள்ளனர். காத்திருப்போர் பட்டியலில் உள்ள 22 பேருக்கு, அவர்களது பணிமூப்புக்கு இணையான 6 அல்லது 7 பதவிகள் உள்ளன.
ஆனால் யாருக்கு எந்தப் பதவியைக் கொடுப்பது என்று தலைமைச் செயலகம் தடுமாறிக் கொண்டிருக்கிறது.இதுதான், இவ்வளவு தாமதத்திற்கும் காரணம்.












Click it and Unblock the Notifications