குரங்கும் இல்லை..மனிதனும் இல்லை
டெல்லி:
கடந்த மாதம் டெல்லியை உலுக்கிய குரங்கு மனிதன் வெறும் வதந்தி என்றும், அப்படி ஒரு மனிதனே இல்லைஎன்றும் டெல்லி போலீஸார் கூறியுள்ளனர்.
டெல்லியை உலுக்கி வந்த குரங்கு மனிதன் குறித்து விசாரணை செய்வதற்காக அமைக்கப்பட்டுள்ள போலீஸ்படையைச் சேர்ந்த டெல்லி துணை போலீஸ் கமிஷனர் ராஜீவ் ரஞ்சன் கூறியதாவது:
டெல்லியில் குரங்கு மனிதன் ஏற்படுத்திய பீதியில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். இரவு நேரங்களில் பொதுமக்களைத்தாக்கியதாகக் கூறப்பட்ட பல இடங்களில் டாக்டர்கள், போலீஸார், கைரேகை நிபுணர்கள் ஆகியோர் நேரில் சென்றுபார்வையிட்டனர். இவர்கள் கடந்த வியாழக்கிழமை தங்கள் அறிக்கைகளை சமர்பித்தனர்.
இந்த அறிக்கைப்படி, நாங்கள் ஆராய்ந்ததில், பொதுமக்களை அச்சப்படுத்தும் வகையில் ஏற்பட்ட பீதி என்றும்வதந்தி என்றும் கருதுகிறோம்.
டெல்லியை உலுக்கிய குரங்கு மனிதன், சர்வதேச அளவில் பேசப்பட வைத்து விட்டான் என்றே கூறலாம்.இதுதொடர்பாக எங்களுக்குக் கிடைத்துள்ள அறிக்கையை நாங்கள் இணை கமிஷனர் சுரேஷ் ராயிடம்செவ்வாய்க்கிழமை தெரிவிக்க உள்ளோம் என்றார்.
முன்னதாக, பாதிக்கப்பட்ட மக்கள் கூறுகையில், குரங்கு போன்று தோற்றமளித்த மனிதன் வீடுகளின் கூரைகளில்,தாவிக்குதித்து மனிதர்களை துன்புறுத்தி வந்தான் என்றும், மனிதர்கள் அணிந்திருந்த நகைகளைப் பறித்துக்கொண்டு ஓடினான் என்றும் கூறினர்.
இந்தக் குரங்கு மனிதனுக்குப் பயந்து ஒருவர் தனது வீட்டுக் கூரையிலிருந்து குதித்து உயிரிழந்தார். இதே போல்குரங்கு மனிதனுக்குப் பயந்து கர்ப்பிணிப் பெண் ஒருவரும், இன்னொருவரும் வீட்டு மாடியிலிருந்து குதித்துஉயிரிழந்தனர்.
குரங்கு மனிதனின் களோபரங்களாலும், கிலியாலும் போலீஸ் நிலையத்துக்கு தினமும் 300 க்கும் மேற்பட்டஅழைப்புகள் வந்த வண்ணம் இருந்தன. சர்வதேச பத்திரிக்கைகளிலும் குரங்கு மனிதன் தலைப்புச் செய்தியானான்.
குறைந்த வருமானம் உள்ள மக்கள் வசிக்கும் பகுதிகளில் இந்த குரங்கு மனிதனால் அனைவருமே கிலியில்உறைந்து காணப்பட்டனர்.
ஆனால் சமீபத்திய நாட்களில் குரங்கு மனிதன் என்ற பேச்சே எங்கும் எழவில்லை. விடைகாணமுடியாத பலகேள்விகளுக்கு விடைகாணுமுன்பே, குரங்கு மாயமாய் மறைந்து விட்டான்.
புலன்விசாரணைக்கு உத்தரவு
இதற்கிடையே, குரங்கு மனிதன் விஷயம் குறித்து புலன் விசாரணை நடத்துவதற்கு டெல்லி போலீஸ் கமிஷனர்அஜய் ராஜ் சர்மா உத்தரவிட்டுள்ளார்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications