அடுத்த குறி முன்னாள் அமைச்சர் நேரு?
சென்னை:
புழுத்துப்போன அரிசி விவகாரத்தில் உணவுத்துறை அமைச்சர் நேரு கைது செய்யப்படுவார் என்று தெரிகிறது.
இதற்காக லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் மாநிலம் முழுவதும் உள்ள கிடங்குகளில் சோதனை நடத்திசாம்பிள்களை ஆய்வுக் கூடங்களுக்கு அனுப்பியுள்ளது.
தமிழக அரசின் நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்குகளில் ரேஷன் கடை மற்றும் சத்துணவுத் திட்டங்களுக்குசப்ளைக்காக வைக்கப்பட்டுள்ள அரிசி புழுத்துப்போனவை என்று நிருபிக்கும் முயற்சியில் அதிமுக அரசுஇறங்கியுள்ளது.
முதல் நடவடிக்கையாக மன்னார்குடி பகுதியிலுள்ள சில கிடங்குகளில் சாம்பிள் அரிசிகள் எடுக்கப்பட்டு அவைதரமற்றவை என முதல்வரின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டது.
பின்னர் ரூ 65 கோடிக்கு கடந்த ஆட்சியில் புழுத்துப்போன அரிசி இருப்பு வைக்கப்பட்டுள்ளதாகவும், இதில் ஊழல்நடந்துள்ளதாகவும் முதல்வர் ஜெயலலிதா பகிங்கரமாகக் குற்றம்சாட்டினார்.
விசாரணைக்கு உத்தரவு:
இதுதொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறையின் விசாரணைக்கு முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். வரும் பட்ஜெட்கூட்டத்தொடரில் புழுத்துப் போன அரிசி விவகாரம் பற்றி வெள்ளை அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்றும்ஜெயலலிதா அறிவித்தார்.
இதையடுத்து தமிழகம் முழுவதும் உள்ள சிவில் சப்ளைஸ் கார்ப்பரேஷனுக்குச் சொந்தமான 300 கிடங்குகளில்அதிரடி சோதனை நடத்தப்பட்டது.
இந்த அதிரடி சோதனையில் நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் கண்காணிப்புப் பிரிவு போலீஸாரும் தீவிரமாகஇறங்கியுள்ளனர்.
தமிழகத்தில் தஞ்சை மாவட்டம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் அதிரடி சோதனை மேற்கொள்ளப்பட்டது.அனைத்து மாவட்டங்களிலும் இதே போல் சோதனை மேற்கொள்ளப்படவிருக்கிறது.
தமிழகத்தில் உள்ள 330 உணவு தானியக் கிடங்குகளில், இருப்பு வைக்கப்பட்டுள்ள 10 லட்சம் டன் நெல் மற்றும்அரிசிகள் சோதனை செய்யப்படுகிறது.
அரிசி தரமானவையா? அதை உணவாகப் பயன்படுத்த முடியுமா? என்பது குறித்தும் சோதனைசெய்யப்படவிருக்கிறது.
கிங் ஆராய்ச்சி மையம்:
சோதனை செய்யப்பட்ட அரிசிகள் சென்னையில் உள்ள கிங் ஆராய்ச்சி மையத்துக்கு அரிசி சாம்பிள்கள் அனுப்பிவைக்கப்படுகிறது.
அங்கு அரிசி சாம்பிள்கள் பரிசோதனை செய்யப்பட்டு அரசுக்கு அறிக்கை தரப்படும். இதுதவிர மத்திய அரசின்ஆய்வுக்கூடங்களுக்கும் சாம்பிள் அனுப்பி வைக்கப்படுகிறது.
நேரு மீது குறி?:
இவ்வாறான ஆய்வறிக்கையை இன்னும் ஒரு வாரத்துக்குள் பெறுவதில் தமிழக அரசு தீவிரமாக உள்ளது.
ஆய்வறிக்கையில் தரமற்ற அரிசி இருப்பு வைக்கப்பட்டுள்ளதாகவும், இவற்றை பயன்படுத்தவே கூடாது என்றும்குறிப்பிடப்பட்டிருந்தால் அதனடிப்படையில் நடவடிக்கை எடுக்க அரசு திட்டமிட்டுள்ளது.
இதையடுத்து, கடந்த ஆட்சியில் உணவுத்துறை அமைச்சராக இருந்த நேரு மீது குறி வைக்கப்படும் என்றுதெரிகிறது.
புழுத்துப் போன அரிசியை வைத்திருப்பதில் ஊழல் நடந்துள்ள நிருபிப்பதற்கு லஞ்ச ஒழிப்பு போலீஸார் தயாராகிவருகின்றனர்.
திமுக விளக்கம்:இதுகுறித்து திமுகவினர் கூறுகையில், விவசாயிகளின் நெல்லாக வாங்கப்பட்டவைதான் இவை. எனவே இவைபுழுத்துப்போனவையா என்பது அதிகாரிகளுக்கு முன்பே தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் இதை வைத்துமுன்னாள் அமைச்சர் நேருவை சிக்க வைக்க அதிமுக முயற்சித்தால் அதை சந்திக்கத் தயாராக உள்ளோம் எனக்கூறியுள்ளனர்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications