கடன் தொல்லை: ரஜினி ரசிகர் தற்கொலை
சென்னை:
சென்னையில், வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்துவது தொடர்பாக சகோதரர்களுடன் ஏற்பட்ட மனக்கசப்புகாரணமாக ரஜினி ரசிகர் மன்ற பிரமுகர் தற்கொலை செய்து கொண்டார்.
சென்னை மதுரவாயல் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன் என்ற ஜிலோ காந்த் (வயது 36). ஜிலோ காந்த்தின்சொந்த ஊர் செஞ்சி. இவர் தென் சென்னை மாவட்ட ரஜினி ரசிகர் மன்ற செயலாளராக இருந்து வந்தார். தீவிரரஜினி ரசிகரான ஜிலோ காந்த், நன்றாகப் பேசக் கூடியவர். மன்றத்தின் மூலம் பல்வேறு பணிகளை அப்பகுதிகளில்செய்து வந்தார்.
ஒரு கால் ஊனமான ஜிலோகாந்த், அப்பகுதியிலுள்ள கார்மண்ட் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.ஜிலோகாந்த்திற்கு சாந்தி என்ற மனைவியும், 3 குழந்தைகளும் உள்ளனர். வேலை பார்க்கும் நிறுவனத்தில் குறைந்தஅளவே சம்பளம் கிடைத்ததால் பணத் தேவைக்கு வெளியில் வட்டிக்குப் பணம் வாங்கி வந்துள்ளார் ஜிலோ காந்த்.இந்தக் கடன் தொகை அதிகமாகவே தான் குடியிருக்கும் சொந்த வீட்டை விற்றுப் பணத்தைக் கொடுக்க முடிவுசெய்தார் ஜிலோகாந்த்.
ஆனால் சொந்த வீட்டில் தனது அண்ணன்களுக்கும் பங்கு உள்ளதால் அவர்களிடம் சென்று வீட்டை விற்பதுதொடர்பாக பேசியுள்ளார். அப்போது அண்ணன்கள், ஜிலோகாந்த்தைக் கண்டித்துள்ளனர் என்று தெரிகிறது.இதனால் மன வருத்தம் அடைந்த ஜிலோகாந்த், ஞாயிற்றுக்கிழமை வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்குப்போட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
தனது மனைவி சாந்திக்கு அவர் எழுதி வைத்திருந்த ஒரு கடிதத்தில், குழந்தையை நன்கு கவனித்துக் கொள்ளுமாறுகூறியுள்ளார் ஜிலோகாந்த். கடந்த வாரம்தான் மனைவி, குழந்தைகளை செஞ்சிக்கு அனுப்பி வைத்துள்ளார் ஜிலோகாந்த்.
தகவல் அறிந்ததும், ரஜினி ரசிகர் மன்ற தலைமைச் செயலாளர் சத்தியநாராயணா, முன்னாள் எம்.எல்.ஏ. சைதைதுரைசாமி உள்ளிட்ட பலர் விரைந்து வந்த ஜிலோகாந்த்தின் உடலுக்கு மலர் மாலை அணிவித்து அஞ்சலிசெலுத்தினர்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications