அடுத்த வருடம் புஷ் இந்தியா வருகை

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்:

இந்தியாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே உள்ள உறுவை வலுப்படுத்தும் வகையில் அமெரிக்க அதிபர்ஜார்ஜ் வில்லியம் புஷ் அடுத்த வருட தொடக்கத்தில் இந்தியா வருகிறார்.

வாஷிங்டனில் அமெரிக்க, இந்திய உறவில் புதிய துவக்கம் என்ற தலைப்பில் நடந்த கருத்தரங்கில் கலந்துகொண்ட தேசிய பாதுகாப்புக் கவுன்சில் மூத்த அதிகாரிடோர்கெல் பேட்டர்சன் மற்றும் அமெரிக்க ராணுவசெயலாளர் டோவ் ஹக்கீம் ஆகியோர் கூறுகையில்,

இந்தியாவுடனான தனது உறவை வலுப்படுத்திக் கொள்ள அமெரிக்கா விரும்புகிறது. இதன் முதற்கட்டமாகஅமெரிக்க அதிபர் புஷ் அடுத்த வருட தொடக்கத்தில் இந்தியா வருகிறார்.

அமெரிக்க முன்னாள் அதிபர் பில் கிளின்டன் கடந்த மார்ச் 2000 ல் இந்தியா சென்றிருந்தார். அதே போல் இந்தியபிரதமர் வாஜ்பாய் அதே வருடம் செப்டம்பர் மாதம் அமெரிக்கா வந்திருந்தார். இந்த வருகையை அடுத்து இருநாடுகளும் பல விஷயங்களில் ஒன்றாகச் செயல்படுகின்றன. பல விஷயங்களில் இரு நாடுகளுக்கிடையேயும் சுமூகஉறவே நிலவுகிறது.

புஷ் வருகையின்போதும் இரு நாடுகளுக்கிடையேயுமான பாதுகாப்பு குறித்து விவாதிக்கப்படும். அதே போல்கடந்த ஏப்ரல் மாதம் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜஸ்வந்த் சிங் அதிபர் புஷ்ஷைச் சந்தித்துப் பலவிஷயங்கள் குறித்துப் பேசினார். இரு நாடுகளுக்குமிடையேயான தீவிரவாதத்தை அடக்குவது குறித்து இருநாட்டுத் தலைவர்களும் விவாதிக்கவுள்ளனர் என்றனர்.

முன்னதாக, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் கடந்த ஏப்ரல் 6 ம் தேதி அமெரிக்கா சென்று வெள்ளைமாளிகையில் அதிபர் ஜார்ஜ் வில்லியம் புஷ்ஷைச் சந்தித்துப் பேசினார்.

அப்போது பிரதமர் வாஜ்பாய் ஜார்ஜ் புஷ்ஷைச் சந்தித்துப் பேச விரும்புவதாகவும், இந்தியாவுக்கு புஷ் வருகை தரவேண்டும் என்றும் பிரதமர் சார்பில் அவர் கூறினார். முன்னதாக, அமெரிக்காவிற்கான இந்தியத் தூதர் லலித்மான்சிங் கூறுகையில், இந்திய-அமெரிக்க உறவில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. பல விஷயங்களில் இருநாடுகளும் ஒருங்கிணைந்து செயல்படுகின்றன என்று கருத்துத் தெரிவித்தார்.

ஐ.ஏ.என்.எஸ்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+