திமுக மீது சத்து உருண்டை ஊழல்: விசாரணைக்கு ஜெ. உத்தரவு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

பள்ளிகளில் சத்துணவுடன் குழந்தைகளுக்கு வழங்கப்பட்டு வந்த சத்து உருண்டைகளில், சோயா மாவுக்குப் பதிலாகமாட்டுக்கு வைக்கப்படும் புண்ணாக்கை திமுக அரசு பயன்படுத்தியது என்று முதல்வர் ஜெயலலிதா புகார் கூறினார்.

இது குறித்து சிபிசிஐடி விசாரணைக்கும் அவர் உத்தரவிட்டுள்ளார்.

சென்னையில் செவ்வாய்க்கிழமை நிருபர்களிடம் ஜெயலலிதா பேசியபோது:

முந்தைய ஆட்சிக் காலத்தில் சத்துணவுத் திட்டத்துடன், ஏழைக் குழந்தைகளுக்கு சத்துருண்டை வழங்கும்திட்டத்தையும் அதிமுக அரசு அறிமுகப்படுத்தியது. 8 லட்சத்திற்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கும், கர்ப்பிணிப்பெண்களுக்கும் இந்த சத்துருண்டைகள் வழங்கப்பட்டன.

சத்துருண்டைகள் தயாரிக்க சோயா, கோதுமை, ராகி ஆகிய மாவுப்பொருட்களையும் மண்டவெல்லத்ததையும்நாங்கள் பயன்படுத்தினோம்.

1996ல் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற திமுக அரசு, சோயா மாவு கலந்த சத்துருண்டைகளை குழந்தைகள்விரும்பவில்லை என்று கூறி, நிலக் கடலை மாவு கலந்த சத்துருண்டைகளைக் கொடுக்க உத்தரவிட்டது.

ஆனால், நிலக் கடலை மாவை அவர்கள் கலக்கவில்லை. நிலக் கடலை மாவு எனக் கூறி மாட்டுப் புண்ணாக்கைத்தான்பொடியாக்கி கலந்தார்கள். மாட்டுக்குப் போடும் புண்ணாக்கைத்தான் மாவாகப் பயன்படுத்தினார்கள். இப்படிமாட்டுப் புண்ணாக்கால் தயாரிக்கப்பட்ட சத்துருண்டைகளைக் குழந்தைகள் எப்படி விரும்புவார்கள்?

சத்து உருண்டைகளை கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் தயாரிக்க நாங்கள் உத்தரவிட்டிருந்தோம். ஆனால், திமுகஆட்சி காலத்தில் வெளிச் சந்தையில் இதைத் தயாரிக்கச் செய்து திமுகவினர் ஊழல் செய்து லாபம்அடித்திருக்கிறார்கள்.

இப்படி குழந்தைகளுக்கும் கர்ப்பிணிப் பெண்களுக்கும் கொடுக்கும் சத்துணவில் கூட, கருணாநிதி தலைமையிலானதிமுக அரசு ஊழல் புரிந்துள்ளது. இதுகுறித்து சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றார்ஜெயலலிதா.

கருணாநிதி மறுப்பு

குழந்தைகளுக்கு மாட்டுப் புண்ணாக்கு கலந்த சத்துருண்டைகளை அளித்ததாக முதல்வர் ஜெயலலிதா கூறும்புகாரைத் திட்டவட்டமாக மறுத்தார் திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான கருணாநிதி.

சென்னையில் செவ்வாய்க்கிழமை நிருபர்களிடம் பேட்டியளிக்கையில், சோயா மாவு கலந்த சத்துருண்டைகளைக்குழந்தைகள் விரும்பவில்லை; அதற்குப் பதிலாக பருப்பு சாம்பாரெல்லாம் நாங்கள் போட்டோம். ஆனால் மாட்டுப்புண்ணாக்கைக் கலந்தோம் என்று சொல்வதெல்லாம் பொய். இதற்கான விசாரணையைச் சந்திக்க நாங்கள் தயார்என்றார் கருணாநிதி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+