For Quick Alerts
For Daily Alerts
தமிழில் 97 மதிப்பெண் பெற்ற ஷாலினி
சென்னை:
எஸ்.எஸ்.எல்.சி.தேர்வில் தமிழில் மாநில அளவில் 2 வது இடம் பெற்ற ஷாலினி டாக்டர் ஆக விருப்பம்தெரிவித்துள்ளார்.
இவர் சென்னை ராயபுரம் செயின்ட் ஆன்ஸ் மேல்நிலைப்பள்ளியில் படித்து வருகிறார். தந்தை பெயர் ஆனந்தமயில்.சென்னை துறைமுகத்தில் வேலை செய்து வருகிறார். தயாார் தீபலட்சுமி. ஷாலினியின் தம்பி சங்கர்குகன் 9 ம் வகுப்புபடித்து வருகிறான்.
தமிழ் பாடத்தில் மாநில அளவில் 2 வது இடத்தைப் பெற்ற ஷாலினி கூறுகையில், 10 ம் வகுப்பு படிக்கும்போது பலபேச்சுப்போட்டிகளில் கலந்து கொண்டுள்ளேன். பெண்கள் விடுதலை, பெண்ணுரிமை பற்றி பேசி பரிசுபெற்றுள்ளேன்.
நரம்பியல் டாக்டராக வேண்டும் என்பதுதான் எனது ஆசை. பெரிய டாக்டராகி ஏழை, எளியவர்களுக்கு சேவைசெய்கிறேன் என்றார் ஷாலினி.
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!